தமிழகத்தில் சட்டப்பேரவைதேர்தல் எப்போது? விவரங்களை தெரிந்து கொள்ள லிங்கை கிளிக் செய்து பார்க்கவும்..!!

தமிழகத்தில் சட்டப்பேரவைதேர்தல் எப்போது? விவரங்களை தெரிந்து கொள்ள லிங்கை கிளிக் செய்து பார்க்கவும்..!!

தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர நடவடிக்கையானது தீவிரமாக நடைபெற்று வந்துள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் 97 லட்சம் வாக்காளர்கள் தற்போது நீக்கப்பட்டுள்ளனர். இதனால் பல கடும் எதிர்ப்புகள் வந்துள்ள நிலையில் தற்போது வாக்காளர் பட்டியலில் மீண்டும் பெயர் சேர்ப்பதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதனை அடுத்து ஏறக்குறைய 20 லட்சம் பேர் மீண்டும் வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதற்காக விண்ணப்பித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

தற்போது அந்த விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு இறுதி வாக்காளர் பட்டியல் பிப்ரவரி 17ஆம் தேதி வெளியிடப்படும் என தேர்தல் ஆணையம் கூறியிருக்கிறது.

தேர்தல் நடைபெறும் நாள் எப்போது?
வருகின்ற தமிழக சட்டப்பேரவை தேர்தல் ஆனது ஏப்ரல் இரண்டாம் வாரத்தில் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பானது மார்ச் மாதம் முதல் வாரத்தில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் அரசியல் கட்சிகளின் பிரச்சார நடவடிக்கைகள் ஆனது தற்போது வேகம் எடுக்கப்படும் என கருதப்பட்டுள்ளது.

தமிழகத்தில் தற்போது ஆட்சியில் உள்ள அரசின் பதவிக்காலமானது வருகின்ற மே மாதம் 10 ஆம் தேதியுடன் நிறைவடைய உள்ள நிலையில் தேர்தல் பணிகள் 2025 வது ஆண்டிலேயே தொடங்கிவிட்டது.

தேர்தல் வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகள் தேர்தல் ஆணையம் தற்போது தொடங்கியுள்ள நிலையில் இன்று (11.02.26) துணை தேர்தல் ஆணையர் பானு பிரகாஷ் எத்துரு சென்னை வருகிறார்.

இவர் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளை சந்திப்பதற்காகவும் வாக்குச்சாவடி வாக்காளர் எண்ணிக்கை குறித்தும், ஆய்வு செய்வதற்காகவும் வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்துடன் புதுச்சேரி, கேரளா, மேற்குவங்கம், அசாம் ஆகிய மாநிலங்களுக்கும் வரும் ஏப்ரல், மே மாதங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த தேர்தல் ஆனது பல்வேறு கட்டங்களாக நடைபெறும் மற்றும் அனேகமாக இரண்டாம் கட்ட தேர்தலின் போது தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெறும் எனவும் தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது.

ஏப்ரல் இரண்டாவது வாரத்தின் இறுதியில் குறிப்பிட்டு கூறினால் ஏப்ரல் 13ஆம் தேதி அன்று ஒரே கட்டமாக தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற வாய்ப்புள்ளது என தமிழக ஊடகங்கள் மூலம் தகவல் தெரியவந்துள்ளது.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK