80’s காலத்தின் ரியல் சிங்கப்பெண்..!! யார் அந்த லின் ஜிண்டுவான்..??

80's காலத்தின் ரியல் சிங்கப்பெண்..!! யார் அந்த லின் ஜிண்டுவான்..??

சிங்கப்பூர்:சிங்கப்பூரில் 1980களில் பெண் பேருந்து ஓட்டுநர்கள் அரிதாக இருந்த காலத்தில், லின் ஜிண்டுவான் என்ற பெண்மணி தைரியமாக டிரான்ஸ்-தீவில் முதல் பெண் ஓட்டுநராக ஆனார்.

அவரது சிறிய உருவம் பலருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தினாலும், “பெண்கள் இவ்வளவு பெரிய பேருந்தை ஓட்ட முடியுமா?” என்ற கேள்விகளுக்கெல்லாம் விடையாக தனது கடின உழைப்பாலும் அமைதியான நம்பிக்கையாலும் மரியாதையைப் பெற்றார்.

இருபது ஆண்டுகள் ஓட்டுநர் வாழ்க்கையில் ஆயிரக்கணக்கான பயணிகளின் அன்பையும் மரியாதையையும் பெற்ற லின் ஜிண்டுவான், தனது பணியில் நெஞ்சை வருடும் அனுபவங்களையும் பகிர்ந்தார். சிலர் அவருக்கு காலை உணவு வாங்கித் தருவார்கள்.சிலர் வெறும் “காலை வணக்கம்” என்று கூறினாலே அது அவருக்கு பேரன்பாக உணரச்செய்ததாக கூறியுள்ளார்.

அதுமட்டுமல்லாமல், ஒரு தாயாக, அதிகாலை 2 மணிக்கு பணியை முடித்தவுடன் தனது குழந்தைக்கான உணவைத் தயார் செய்து விட்டு மீண்டும் வேலையில் ஈடுபட்டார். அவரின் தாய்மையிலான அர்ப்பணிப்பு மற்றும் தைரியம், பெண்களின் நிலைத்தன்மையின் உண்மையான சின்னமாக மாறியது.

லின் ஜிண்டுவானின் கதை, தைரியம் என்பது அச்சமின்மையல்ல மாறாக அது கடினமான பாதையிலும் முன்நகரும் உறுதியே உண்மையான தைரியம் என்பதை உணர்த்துகிறது.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK