அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்ட ஆடவர் யார்..??
அமெரிக்காவில் இருந்த சிங்கப்பூருக்கு நாடு கடத்தப்பட்ட உள்ளூர் வலை பதிவாளர் ஆன அமோஸ் யீ, தேசிய சேவை கட்டாய ராணுவ சேவையை மீறிய காரணத்திற்காக குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.
27 வயதைச் சேர்ந்த பெங்ஷானுக்கு 2017 ஆம் ஆண்டு அமெரிக்காவில் அரசியல் ரீதியாக அடைக்கலம் கொடுக்கப்பட்டது.
2020இல் இவர் குழந்தைகள் ஆபாச படங்களை வைத்திருந்ததற்காகவும் சிறுமிகளை பாலியல் வன்கொடுமைகள் செய்ததற்காகவும் சிகாகோவில் அமெரிக்க மார்ஷல்களால் கைது செய்யப்பட்டார்.
2025 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இல்லினாய்சில் உள்ள டான்வில் சீர்திருத்த மையத்தில் இருந்து விடுவிக்கப்பட்டார் அதன் பிறகு மீண்டும் அமெரிக்க குடியரசு மற்றும் சுங்க அமலாக்க துறையால் (ICE) விசாரணைக்கு தடுத்து வைக்கப்பட்டார்.
கடைசியாக கிடைத்த தகவலின் படி அமெரிக்க குடியரசு மற்றும் சுங்க அமலாக்க துறையில் தடுப்பு மையமான மியாமி சீர்திருத்த நிலையத்தில் இவர் விசாரணைக்காக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
குழந்தையின் ஆபாச படங்களை வைத்திருந்த காரணத்திற்காகவும், சிறுமிகளை வன்கொடுமை செய்ததற்காகவும் பெங்ஷானுக்கு 2021 ஆம் ஆண்டு அமெரிக்க நீதிமன்றம் ஆனது ஆறு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டதாக முந்தைய அறிக்கையின் மூலம் தெரிய வந்தது.
அதன் பிறகு இன்று (மார்ச் 20) சிங்கப்பூர் நீதிமன்றத்தில் இவர் மீது குற்றம் சாட்டப்பட்டு வழக்கு தொடரப்பட உள்ளது.
இந்த வழக்கிற்காக தேவைப்படும் முன் சேர்ப்பு மருத்துவ பரிசோதனைக்கு ஆஜராகவில்லை மற்றும் வெளியேறும் அனுமதி இல்லாமல் வெளிநாட்டில் தங்கியிருந்தது உள்ளிட்ட தேசிய சேவை சேர்ப்பு சட்டத்தை மீறிய குற்றத்திற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பதை தேசிய பாதுகாப்பு அமைச்சகம் முன்னதாக குறிப்பிட்டிருந்தது.