என்னது..!! இந்த லைட் பயன்படுத்தினால் $5000 வரை அபராதமா..??
சிங்கப்பூர் வாகன ஓட்டிகளின் கவனத்திற்கு..!! சிங்கப்பூரில் பொதுவாக எதிரே வரும் வாகனம் Dim மற்றும் Bright இன்று இருவகை ஒளி வகைகளை பயன்படுத்தி வாகனங்களை ஓட்டுனர்கள் இயக்கலாம்.
ஆனால் சிலர் அந்த லைட்டுகளை Modify என்று பெயரில் மாற்றியமைத்த எதிரேவரும் வாகனமே தெரியாத அளவிற்கு அதீத வெளிச்சத்தில் ஒளிர விட்டு ஓட்டிக்கொண்டு வருகிறார்கள்.
இது போன்ற லைட் பொருத்தி வாகனம் ஓட்டுபவர்களாக இருந்தாலும் அதை பொருத்தி தரும் மெக்கானிக் உள்ளிட்டவர்களுக்கும் 5000 வெள்ளி வரை அபராதமும் மேலும் மூன்று மாத சிறை தண்டனையும் விதிக்கப்பட வாய்ப்பு உள்ளது.
சிங்கப்பூர் அரசு போக்குவரத்து தொடர்பான விஷயங்களில் முக்கியத்துவம் அதிகமாக எடுத்துக் கொள்கிறது என்பதற்கு இது ஒரு முக்கிய சான்றாக கருதப்படுகிறது.