நாம் இந்தத் தொகுப்பில் சிங்கப்பூரில் சரியான முறையில் டிரைவிங் லைசன்ஸ் எடுப்பதற்கு நீங்கள் என்னென்ன செய்ய வேண்டும் என்று பார்த்து வருகிறோம். இதன் முதல் பாகம் இதற்கு முன் நாம் வெளியிட்டுள்ளோம். அதை படித்துவிட்டு இதை படித்தீர்கள் என்றால் உங்களுக்கு மிகவும் தெளிவாக புரியும்.
இந்தத் தொகுப்பில் நீங்கள் சிங்கப்பூரில் டிரைவிங் லைசன்ஸ் எடுக்க வரும் தடங்கல்கள் என்ன என்று பார்ப்போம்.
இந்த பகுதியை முழுமையாக படித்து விட்டு அதன் பிறகு நீங்கள் டிரைவிங் லைசென்ஸ் எடுக்க முயற்சிக்கலாம். ஏனென்றால் ஒரு சிலரால் சிங்கப்பூரில் டிரைவிங் லைசென்ஸ் எடுக்க முடியாது.அதுமட்டும் இல்லாமல் நீங்கள் டிரைவிங் லைசன்ஸ் எடுக்க முயற்சித்தால் உங்களின் பணமே வீணாகும்.
சிங்கப்பூரில் டிரைவிங் லைசன்ஸ் எடுப்பது மிகவும் கடினம் ஏனென்றால் பலர் சிங்கப்பூரில் கடினமான வேலைகளை செய்து கொண்டு வருகின்றனர்.அதாவது சிலர் பத்திலிருந்து பன்னிரண்டு மணி நேரம் வேலை பார்க்கின்றன.
பலருக்கு உணவருந்தவும் உணவு தயார் செய்யவும் தூங்குவதற்கு நேரம் சரியாக உள்ளது. ஏனென்றால் அவர்களின் வேலை நேரம் அதிகம்.
இது போன்ற அதிக வேலை நேரம் உள்ளவர்கள் டிரைவிங் லைசன்ஸ் எடுக்க முயற்சி செய்திருப்பீர்கள். ஆனால் நேரமின்மை காரணமாக அவர்கள் பணத்தை இழப்பது தான் அதிகமாக நடக்கிறது.
நீங்கள் உங்களின் முதல் வகுப்பிற்கு செல்லும் பொழுது நீங்கள் 100 முதல் 200 வெள்ளி வரை செலவு செய்திருப்பீர்கள் ஆனால் உங்களால் கடைசி வகுப்பு வரை செல்ல முடியாது அதனால் உங்கள் பணம் வீணாவது உறுதி.
அதனால் நீங்கள் டிரைவிங் லைசன்ஸ் எடுப்பதற்கு முன்பு உங்களுக்கு வேலை நேரம் மற்றும் டிரைவிங் ஸ்கூலில் உள்ள நேரம் இரண்டும் ஒத்துப் போகிறதா என்று பார்த்து அதன் பிறகு பணம் செலுத்துவது நல்லது.
அடுத்தபடியாக ஒரு சில கம்பெனிகள் அவர்களிடம் வேலை செய்யும் வேலை ஆட்கள் டிரைவிங் லைசன்ஸ் எடுத்து விட்டால் வேலையை விட்டு சென்று விடுவார்கள் என்று டிரைவிங் லைசன்ஸ் எடுப்பதற்கு அனுமதிப்பது இல்லை.
சிங்கப்பூரில் வேலை செய்யும் பல தொழிலாளர்கள் டிரைவிங் லைசன்ஸ் எடுப்பது கம்பெனிக்கு தெரியக்கூடாது என்று நினைக்கிறார்கள்.
டிரைவிங் லைசன்ஸ் எடுப்பது தெரிந்தால் ஒரு சில கம்பெனிகள் அவர்களுடைய வொர்க் பர்மீட்டை கேன்சல் செய்து ஊருக்கு அனுப்பி விடுகின்றனர்.
எனவே நீங்கள் உங்கள் கம்பெனியின் நிலவரம் என்ன என்று தெரிந்து கொண்டு அதன் பிறகு முயற்சி செய்வது நல்லது ஒரு சில கம்பெனிகள் அவர்களுக்கே தேவைப்படும் என்று டிரைவிங் லைசன்ஸ் எடுக்க அனுமதிப்பார்கள். அது போன்ற கம்பெனி அனுமதி கிடைத்தால் டிரைவிங் லைசன்ஸ் எடுப்பது மிகவும் எளிது.
நீங்கள் டிரைவிங் லைசன்ஸ் எடுக்கும் பொழுது ஆகும் செலவு என்பது மிகவும் அதிகம் தோராயமாக நீங்கள் டிரைவிங் லைசென்ஸ் எடுக்க 1500 சிங்கப்பூர் டாலர் முதல் 2500 சிங்கப்பூர் டாலர் வரை செலவாக வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
ஆனால் பலருக்கு மிகவும் குறைவான சம்பளமும் வீட்டிற்கு அனுப்ப வேண்டிய அவசியமும் உள்ளதால் சிறிது சிறிதாக பணத்தைக் கட்டி டிரைவிங் லைசன்ஸ் எடுக்க முயற்சி செய்கின்றனர். ஒரு கட்டத்தில் அவர்களிடம் பணம் பற்றாக்குறையால் டிரைவிங் லைசன்ஸ் எடுக்கும் திட்டத்தை கைவிடுகின்றனர். இதனால் இதற்கு முன் அவர்கள் கட்டிய பணம் அவர்களுக்கு இழப்பாகவே அமைகிறது.
இதனால் நீங்கள் டிரைவிங் லைசன்ஸ் எடுப்பதற்கு முன் இந்த தொகை உங்களால் தயார் செய்ய முடியுமா? இறுதிவரை உங்களால் பணத்தைக் கட்டி லைசென்ஸ் எடுக்க முடியுமா என்று தெரிந்து கொண்டு அதன்பிறகு நீங்கள் டிரைவிங் லைசன்ஸ் எடுக்க முயற்சி செய்வது நல்லது.
இதேபோன்று நாம் வெளிநாட்டு வேலைக்கு முயற்சி செய்வது எப்படி என்றும் சரியான முறையில் வெளிநாட்டு வேலைக்கு வருவது எப்படி என்றும் நான்கு பாகங்கள் வெளியிட்டுள்ளோம் அந்த நான்கு பாகத்தின் லிங்கை கீழே கொடுக்கிறோம் படித்தீர்கள் என்றால் வெளிநாட்டு வேலையில் உள்ள சிக்கல்கள் மற்றும் அதற்கான தீர்வும் தெரியவரும்.
நம்முடைய அடுத்த பதிவில் வெளிநாட்டு ஊழியர்கள் டிரைவிங் லைசன்ஸ் சிங்கப்பூரில் எடுப்பதற்கான வழிமுறைகள் என்னென்ன உள்ளது என்று பார்க்கலாம் .