சிங்கப்பூர் செல்வதற்கான Skilled Test துவங்கிவிட்டது...!! இதற்காக காத்து இருப்பவர்களுக்கான அப்டேட் இதோ..!!
சிங்கப்பூர் செல்வதற்கு பல தடைகள் இருந்தாலும் மிகவும் சிறந்த மற்றும் சரியான வழி என்னவென்றால் அது டெஸ்ட் அடித்து செல்வது தான்.
ஏனென்றால் நீங்கள் ஒரு ஒரு முறை டெஸ்ட் அடித்து சிங்கப்பூர் சென்று விட்டால் அதன் பிறகு உங்களுடைய அதிகபட்ச வயது வரை சிங்கப்பூரிலேயே இருக்கலாம். அடுத்த முறை செல்லும் போது நீங்கள் அதிக பணம் கட்டவும் தேவையில்லை.
சிங்கப்பூரில் தற்பொழுது அதிகமாக சம்பாதிப்பவர்களும் நீண்ட நாட்கள் இருப்பவர்களிடம் யார் என்று கேட்டால் அவர்கள் பல வருடங்களுக்கு முன்பு ஸ்கில்டு டெஸ்ட்(Skilled Test) அடித்து போனவர்களாகத்தான் இருப்பார்கள். சமீப காலமாக டெஸ்ட் அடிக்க முடியாமல் பலர் தவித்து வருகின்றனர்.
ஆனால் இப்பொழுது புதிய விதிமுறைகளின் படி ஸ்கில்டுடெஸ்ட் அடிப்பதற்காக தமிழ்நாட்டில் ஒரு சில இன்ஸ்டிடியூட்டுகள் முறையான அனுமதி பெற்று துவங்கி விட்டார்கள்.
இதற்கு நீங்கள் செல்லும் பொழுது ஏஜெண்டுகளிடம் அதிகமான பணம் கட்டத் தேவையில்லை நேரடியாக நீங்கள் செல்வது சிறந்தது. அது போல் நீங்கள் அதிக நாள் காத்திருக்க வேண்டியது வரலாம் அதனால் நீங்கள் எத்தனை நாளில் டெஸ்ட் அடிப்பீர்கள் என்பதை கேட்டு தெரிந்து கொண்டு அதன்பின் செல்வது நல்லது.
நமக்குத் தெரிந்த இடத்தில் அதிகபட்சம் ஒரே மாதத்தில் நீங்கள் ஸ்கில்டு டெஸ்ட் அடித்து சிங்கப்பூர் சென்று விடலாம். பணமும் அதிகமாக கட்ட தேவையில்லை; இதற்காக கம்பெனி அனுமதி கடிதம் தேவையில்லை; நீங்கள் நேரடியாகவே ஒர்க் பெர்மீட்டில் தான் செல்ல போகிறீர்கள்; அங்கே சென்று பிசிஏ வின் அப்பாயிண்ட்மெண்ட் தேதி கிடைத்தவுடன் அங்கேயே நீங்கள் டெஸ்ட் அடித்துக் கொள்ளலாம்.
ஒருமுறை நீங்கள் பெயில் (Fail) ஆகிவிட்டாலும் இரண்டாவது முறையும் நீங்கள் டெஸ்ட் எடுக்கலாம். அதற்கான தொகையை கம்பெனியே கட்டுவார்கள்;ஆனால் அதை உங்கள் சம்பளத்தில் இருந்து பிடித்துக் கொள்வார்கள்.
அரசு அனுமதியுடன் இயங்கும் இன்ஸ்டியூட் என்பதால் இதில் ஏமாற்று வேலை எதுவும் கிடையாது. நீங்கள் ட்ரைனிங்க்கு மட்டும் பணம் கட்டினால் போதும்; வேறு எந்த முன்பணமும் கிடையாது.அதிகபட்சம் ஒரு மாதத்தில் நீங்கள் சிங்கப்பூர் செல்ல அனைத்து வேலைகளையும் செய்து முடித்து விடுவார்கள்.
இதில் முதல் பேட்ச் (Batch) சில நாட்களுக்கு முன்பு தான் சிங்கப்பூர் சென்று அடைந்தது. இப்பொழுது இரண்டாவது பேட்ச்ற்கான அட்மிஷன் தொடங்கி விட்டார்கள். முந்துபவர்களுக்கு மட்டுமே வாய்ப்பு.