2026 ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் புதிய நடைமுறை – CAAS இன் அறிவிப்பு..!!

2026 ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் புதிய நடைமுறை - CAAS இன் அறிவிப்பு..!!

சிங்கப்பூர் விமான நிலையத்திலிருந்து புறப்படும் விமானங்கள், சரக்கு விமானங்கள் மற்றும் பயணிகள் உட்பட வரி செலுத்த வேண்டும் என்று புதிய விதிமுறையை சிங்கப்பூர் விமான போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது.

இந்த புதிய நடைமுறையானது அடுத்த ஆண்டு 2026 ஏப்ரல் 1 முதல் அக்டோபர் 1 வரை வரி செலுத்த வேண்டும் என்று சிங்கப்பூர் சிறு விமான போக்குவரத்தானையில் அறிவித்த வெளியிட்டுள்ளது.

பயணிகள் செலுத்த வேண்டிய கூடுதல் கட்டணமானது சேருமிடம் மற்றும் சேவையின் வகுப்பை பொறுத்து மாறுபடும். அதாவது 1 முதல் 41.60 டாலர்கள் வரை இருக்கும்.

இந்த புதிய நடைமுறையில் விமானங்கள் நிலையான விமான எரிபொருள் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூடுதல் கட்டணங்கள் ஆனது மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. அவை: பயணிகள், சரக்கு மற்றும் பொது மற்றும் வணிக விமான பயணங்களை இலக்காக கொண்டுள்ளது.

பயணிகளுக்கு விதிக்கப்படும் இந்த கூடுதல் கட்டணம் சேருமிடம் மற்றும் கேபின் வகுப்பின் அடிப்படையில் பொறுத்து கணக்கிடப்படும். விமான தூரத்திற்கு ஏற்ப சேரும் இடங்களானது நான்கு குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ளது.
💠முதல் குழு: தென்கிழக்கு ஆசியா 💠இரண்டாவது குழு: வடகிழக்கு ஆசியா, தெற்காசியா, ஆஸ்திரேலியா மற்றும் பப்புவா நியூ கினியா
💠மூன்றாவது குழு: ஆப்பிரிக்கா மத்திய மற்றும் மேற்கு ஆசியா, ஐரோப்பா, மத்திய கிழக்கு பசிபிக் தீவு நாடுகள் மற்றும் நியூசிலாந்து
💠நான்காவது குழு அமெரிக்கா

கேபின் வகுப்புகளானது இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது.
✨ எக்கானமி கேபின்
✨ ப்ரீமியம் கேபின்

எக்கனாமி கேபினில் விமானத்தின் எக்கனாமி வகுப்பு மற்றும் ப்ரீமியம் எக்கானமி வகுப்பு அடங்கும்.

ப்ரீமியம் கேபினில் வணிக வகுப்பு மற்றும் முதல் வகுப்பு உள்ளடங்கும்.

இந்த பிரீமியம் வகுப்பிற்கான நிலையான எரிபொருள் கூடுதல் கட்டணம் பொருளாதார வகுப்பை விட நான்கு மடங்கு அதிகமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உதாரணமாக, தென்கிழக்கு ஆசிய நாடுகளில் கூடுதல் கட்டணம் பொருளாதார வகுப்பிற்கு ஒரு டாலரும், பிரீமியம் வகுப்பிற்கு 4 டாலர்களும், அமெரிக்காவிற்கு செல்ல வேண்டுமென்றால், பொருளாதார வகுப்பு பயணிகள் செலுத்த வேண்டிய கட்டணம் 10.4 டாலர் மற்றும் பிரீமியம் வகுப்பு பயணிகள் 41.6 டாலர்களும் செலுத்த வேண்டும்.

மலேசியாவில் இருந்து தாய்லாந்தின் பாங்காங், ஜப்பானின் டோக்கியோ, இங்கிலாந்தின் லண்டன் ஆகிய இடங்களுக்குச் செல்லும் விமானங்களுக்கான பொருளாதார வகுப்பு கூடுதல் கட்டணங்கள் ஆனது 1,2.8 மற்றும் 6.4 ஆக இருக்கும் என விமான போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது.

சரக்குகளுக்கு எடை மற்றும் சேரும் இடத்தின் அடிப்படையை பொறுத்து கூடுதல் கட்டணம் கணக்கிடப்படும் ஒரு கிலோ சரக்குக்கு ஒரு சென்ட் முதல் 15 சென்ட் வரை கூடுதலாக கட்டணமானது வசூலிக்கப்படும்.

விமானம் போக்குவரத்து துறையினுடைய நிலைத்தன்மையை உறுதிப்படுத்துவதற்காக அடுத்த ஆண்டு 2026 மொத்த எரிபொருள் நுகர்வில் நிலையான விமான எரிபொருளின் பயன்பாட்டை 1% ஆகவும் 2030 ஆம் ஆண்டிற்குள் 3% முதல் 5% வரை அதிகரிக்கும் என சிங்கப்பூர் இலக்கு நிர்ணயித்துள்ளது.

இந்த இலக்கினை அடைவதற்காக கட்டாயமாக நிலையான விமான எரிபொருள் கூடுதல் கட்டணம் மூலம் நிலையான விமான எரிபொருளை சிங்கப்பூர் வாங்கும் என அறிவித்துள்ளது.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK