2026ல் சம்பளம் கூடுமா..? மனிதவள நிறுவனங்கள் வெளியிட்ட முக்கிய தகவல்..!!

2026ல் சம்பளம் கூடுமா..? மனிதவள நிறுவனங்கள் வெளியிட்ட முக்கிய தகவல்..!!

சிங்கப்பூர்: சிங்கப்பூரில் பணிபுரியும் ஊழியர்களின் சம்பளம் 2026ஆம் ஆண்டில் மூன்று முதல் ஆறு விழுக்காடு வரை உயரக்கூடும் என்று மனிதவள நிறுவனங்கள் நடத்திய அண்மைய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பொருளாதார நிச்சயமற்ற நிலை தொடர்ந்தாலும், நிறுவனங்கள் ஊழியர்களுக்கு குறைந்த அளவிலாவது சம்பள உயர்வை வழங்க முன்வரலாம் என ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன.

மனிதவள நிறுவனங்களின் கருத்துப்படி, இந்த ஆண்டைப் போலவே அடுத்த ஆண்டும் முதலாளிகள் சம்பள விவகாரத்தில் எச்சரிக்கையுடன் இருப்பார்கள். இருப்பினும், சிறிய சம்பள உயர்வும் குறைந்த போனஸ் தொகைகளும் வழங்கப்படுவதற்கான வாய்ப்பு அதிகம் என கூறப்படுகிறது. பெரும்பாலான நிறுவனங்கள் ஊழியர்களை தக்கவைக்க இது அவசியம் என்பதை உணர்ந்துள்ளதாக மேன்பவர் குரூப் சிங்கப்பூர் திறன் நிறுவனத்தின் நிர்வாகி லின்டா டியோ தெரிவித்துள்ளார்.

மேன்பவர் குரூப் நடத்திய வருடாந்தர சம்பள மற்றும் போனஸ் ஆய்வில், 21 விழுக்காடு முதலாளிகள் மூன்று விழுக்காட்டுக்கும் குறைவாக சம்பளத்தை உயர்த்த திட்டமிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. கடந்த ஆண்டு இது 18 விழுக்காடாக இருந்தது. அதே நேரத்தில், ஐந்து விழுக்காட்டுக்கும் அதிகமாக சம்பள உயர்வு வழங்க திட்டமிட்டுள்ள முதலாளிகள் 23 விழுக்காடாக குறைந்துள்ளனர்.கடந்த ஆண்டு அது 26 விழுக்காடாக இருந்தது. இந்த ஆய்வு கடந்த அக்டோபரில் 500க்கும் மேற்பட்ட நிறுவனங்களில் மேற்கொள்ளப்பட்டது.

ஏஒன் மற்றும் பெர்சொல் நிறுவனங்களின் ஆய்வுகள், 2026ஆம் ஆண்டில் சராசரியாக 4.3 விழுக்காடு சம்பள உயர்வு வழங்கப்படலாம் என தெரிவிக்கின்றன. இதேபோன்ற உயர்வை ஊழியர்கள் இந்த ஆண்டும் பெற்றிருந்தனர். மேலும், அனைத்துலக திறனாளர் நிறுவனம் ரோபர்ட் வால்டர்ஸ், தற்போதுள்ள நிறுவனத்தில் தொடர்ந்து பணிபுரியும் ஊழியர்கள் மூன்று முதல் ஆறு விழுக்காடு வரை சம்பள உயர்வை எதிர்பார்க்கலாம் என குறிப்பிட்டுள்ளது. இது இந்த ஆண்டுக்கான முன்னறிவிப்பைவிட அதிகமாகும்.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK