சிம் கார்டு மோசடி…!!! காவல்துறையின் அதிரடி நடவடிக்கையில் சிக்கிய 44 பேர்…!!

சிம் கார்டு மோசடி...!!! காவல்துறையின் அதிரடி நடவடிக்கையில் சிக்கிய 44 பேர்...!!

சிங்கப்பூர்: சிங்கப்பூரில் தீவு முழுவதும் போலீசார் மேற்கொண்ட அமலாக்க நடவடிக்கையின் போது, சிம் கார்டுகளை மோசடியாகப் பதிவு செய்ததாக சந்தேகிக்கப்படும் 44 பேர் மீது விசாரணை நடத்தப்பட்டது.

வணிக விவகாரத் துறை, குற்றப் புலனாய்வுத் துறை மற்றும் ஏழு காவல் நிலையங்கள் இணைந்து, ஜூலை 17 முதல் 25 வரை போஸ்ட்பெய்டு தொலைபேசி அட்டைகளை சட்டவிரோதமாக குற்றக் கும்பல்களுக்கு மறுவிற்பனை செய்யும் செயற்பாடுகளை தடுக்கும் நடவடிக்கையை தொடங்கின.

கைது செய்யப்பட்டவர்களில் 21 ஆண்கள் மற்றும் 10 பெண்கள் அடங்குவர்.

மேலும் 16 முதல் 57 வயதுக்குட்பட்ட 13 பேர் விசாரணைக்கு உதவி வருகின்றனர்.

முதற்கட்ட விசாரணையில், ஒவ்வொரு சிம் கார்டுக்கும் S$1.85 முதல் S$2.78 வரை பணம் பெற்றதாகவும், சிலர் 31 முதல் 49 அட்டைகள் வரை வழங்கியதாகவும் தெரியவந்தது.

இவர்கள் பல்வேறு தொலைத்தொடர்பு கடைகளில் இவ்வாறு பதிவு செய்தனர்.

இந்த சிம் மற்றும் eSIM கார்டுகள் மோசடி, கடன் வசூல், பாலியல் வர்த்தகம் போன்ற சட்டவிரோத நடவடிக்கைகளில் தொடர்பு வழிகளாகப் பயன்படுத்தப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

சிங்கப்பூரில் சிம் கார்டுகளை தவறாக பதிவு செய்து குற்றக் கும்பல்களுக்கு விற்பனை செய்வது கடுமையான குற்றமாக கருதப்படுகிறது. இம்மாதிரியான குற்றங்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறதண்டனை அல்லது S$10,000 வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

Follow us on : click here 

WHATSAPP CHANNEL LINK👉

👉
 https://whatsapp.com/channel/0029VakjPqJ0bIdqf8hGIR14 

Instagram  : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 

Facebook  : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL

Telegram  : https://t.me/tamilan