ஹைதராபாத்தில் இண்டிகோ விமான சேவையானது எட்டாவது நாளாக நேற்று முன்தினமும் பாதிக்கப்பட்டுள்ளது.
ஹைதராபாத் சம் ஷாபாத் விமான நிலையத்தில் நேற்று முன்தினம் வரவேண்டிய 14 விமானங்கள் புறப்பட வேண்டிய 44 விமானங்கள் என மொத்தமாக 58 விமானங்கள் ரத்தாகியுள்ளது.
மேலும் இதே போல விசாகப்பட்டினத்தில் இருந்த ஹைதராபாத் பெங்களூர் செல்ல வேண்டிய 6 இண்டிகோ விமான சேவைகளும் ரத்தாகியுள்ளன.
இந்த அவல நிலையால் பயணிகள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
இண்டிகோ விமான சேவை இதே போல் பாதிக்கப்பட்ட காரணத்தினால் ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் நாடு முழுவதும் கூடுதலாக 100 விமானங்களை தற்போது இயக்கிய வருகின்றது என தெரியவந்தது.