சிங்கப்பூரில் 639 பேர் மீது மோசடி விசாரணை..!! S$3.3 மில்லியன் இழப்பு..!

சிங்கப்பூரில் 639 பேர் மீது மோசடி விசாரணை..!! S$3.3 மில்லியன் இழப்பு..!

சிங்கப்பூர்: சிங்கப்பூரில் மோசடி மற்றும் பண மோசடியில் ஈடுபட்டதாகக் கூறப்படும் 639 ஆண்களும் பெண்களும் காவல்துறையினரால் விசாரிக்கப்படுகின்றனர்.

வணிக விவகாரத் துறையும், ஏழு காவல் நிலையங்களும் இணைந்து இந்த மாதம் 4ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரை இரு வாரங்களை கொண்ட அமலாக்க நடவடிக்கையை நடத்தியதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இந்த நடவடிக்கையில் 16 முதல் 85 வயதுக்குட்பட்ட 171 பெண்களும் 468 ஆண்களும் விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்கள் 2,200க்கும் மேற்பட்ட மோசடி வழக்குகளில் தொடர்புடையவர்கள் என காவல்துறை நம்புகின்றது.

இதில் முக்கியமாக நண்பர்களாக, அரசு அதிகாரிகள் போன்று ஆள்மாறாட்டம் செய்வது, போலி முதலீட்டுகள், வேலைவாய்ப்பு மோசடிகள், மின் வணிக மோசடிகள் மற்றும் வீட்டுவாடகை மோசடிகள் ஆகியவை அடங்குகின்றன.

இந்த மோசடிகளால் பாதிக்கப்பட்டவர்கள் மொத்தமாக $3.3 மில்லியன் பணத்தை இழந்துள்ளனர்.

மேலும் அவர்கள் மோசடி தொடர்பான குற்றங்கள்,பணமோசடி மற்றும் உரிமம் இல்லாமல் கட்டண சேவைகளை வழங்குதல் ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் காவல்துறையால் தீவிரமாக விசாரிக்கப்படுகின்றனர்.

Follow us on : click here 

WHATSAPP CHANNEL LINK👉

👉
 https://whatsapp.com/channel/0029VakjPqJ0bIdqf8hGIR14 

Instagram  : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 

Facebook  : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL

Telegram  : https://t.me/tamilan