மேற்கு சிங்கப்பூருக்கு சூப்பர் அப்டேட்..!! Cross Island Line-ல் 4 புதிய MRT நிலையங்கள் அறிவிப்பு!

மேற்கு சிங்கப்பூருக்கு சூப்பர் அப்டேட்..!! Cross Island Line-ல் 4 புதிய MRT நிலையங்கள் அறிவிப்பு!

சிங்கப்பூர்: மேற்கு சிங்கப்பூரில் வசிக்கும் பொதுமக்களின் போக்குவரத்து வசதியை மேலும் மேம்படுத்தும் வகையில், Cross Island Line (CRL) திட்டத்தின் மூன்றாம் கட்டத்தில் (Phase 3) 4 புதிய MRT நிலையங்கள் அமைக்கப்படவுள்ளதாக அரசு அறிவித்துள்ளது.

போக்குவரத்து அமைச்சர் ஜெஃப்ரி சியோ வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, இந்த புதிய நிலையங்கள் Taman Jurong, Jurong Pier, Gul Circle உள்ளிட்ட மேற்கு சிங்கப்பூரின் முக்கிய பகுதிகளுக்கு MRT சேவையை விரிவுபடுத்தும்.

இதன் மூலம் தற்போது பேருந்துகளை அதிகம் நம்பியுள்ள ஆயிரக்கணக்கான குடியிருப்பாளர்கள் மற்றும் தொழிற்பேட்டைகளில் பணிபுரியும் ஊழியர்கள், இனி விரைவாகவும் வசதியாகவும் MRT மூலம் பயணம் செய்ய முடியும்.

இந்த விரிவாக்கத்தின் ஒரு பகுதியாக, Jurong Pier மற்றும் Gul Circle ஆகிய நிலையங்கள், ஏற்கனவே இயங்கி வரும் MRT வழித்தடங்களுடன் இணையும் Interchange நிலையங்களாக செயல்படும். இதனால், மேற்கு சிங்கப்பூரில் இருந்து நகரின் பிற பகுதிகளுக்கு பயணம் செய்யும் நேரம் குறிப்பிடத்தக்க அளவில் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய MRT நிலையங்களுக்கான கட்டுமானப் பணிகள் 2027-ஆம் ஆண்டு தொடங்கும் என திட்டமிடப்பட்டுள்ளது. அனைத்து பணிகளும் நிறைவடைந்த பிறகு, 2030-களின் இறுதியில் இந்த நிலையங்கள் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

Cross Island Line முழுமையாக நிறைவடைந்ததும், சுமார் 67 கிலோமீட்டர் நீளத்தில் 21-க்கும் மேற்பட்ட நிலையங்களைக் கொண்ட, சிங்கப்பூரின் மிக நீளமான முழுமையான நிலத்தடி MRT பாதையாக உருவாகும். இந்த திட்டம் நாட்டின் கிழக்கு, மத்திய மற்றும் மேற்கு பகுதிகளை நேரடியாக இணைப்பதுடன், தற்போதுள்ள MRT வழித்தடங்களில் ஏற்படும் பயண நெரிசலையும் குறைக்க உதவும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த ரயில் பாதையின் இறுதி கட்டம், மேற்கு பகுதியில் உள்ள குடியிருப்பாளர்களுக்கும் ஊழியர்களுக்கும் ரயில் சேவை மூலம் மேலும் நேரடியான, வசதியான பயண தெரிவுகளை வழங்கும் என்று நிலப் போக்குவரத்து ஆணையம் (LA)இன்று (ஜூலை 31) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.