சிங்கப்பூரில் 7 பேர் கைது..!!!எதற்கு? தெரிந்து கொள்ள பதிவை முழுமையாக படிக்கவும்..!!

சிங்கப்பூரில் 7 பேர் கைது..!!! எதற்கு? தெரிந்து கொள்ள பதிவை முழுமையாக படிக்கவும்..!!

சிங்கப்பூரில் நிலப் போக்குவரத்து ஆணையம் வாகன சோதனையில் ஈடுபட்டது.

சாங்கி விமான நிலையம், மரினா பே சொகுசு கப்பல் நிலையம் உள்ளிட்ட இடங்களில் சோதனை நடத்தியது.

இந்த சோதனையில் சட்டவிரோதமாக வாகனத்தை ஓட்டி சென்ற ஏழு பேர் பிடிபட்டனர்.

அவர்களை சோதித்த போது வாகன உரிமம் இல்லாமல் சட்டவிரோதமாக ஓட்டியது உறுதியானது. மேலும் வாகனம் ஓட்டிய நபர்களுக்கு உரிய காப்புறுதியும் இல்லை.

7 பேருக்கும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு குற்றம் சாட்டப்பட்டது.

இந்தச் செய்தியை போக்குவரத்துக்கான மூத்த துணை அமைச்சர் சுன் ஷூவெலிங் பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

திருவாட்டி சுன் குறிப்பிட்டதாவது:
“மலேசியாவிற்கு பயணம் செய்ய விரும்புபவர்கள் முறையாக உரிமம் பெற நிறுவனங்களை அணுக வேண்டும்”.

சிங்கப்பூர் பயணிகளின் தேவையை சமாளிப்பது குறித்து மலேசியாவின் அதிகாரிகளுடன் ஆலோசிப்பதாக கூறினார்.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK