உதவிய குற்றத்திற்காக 9 பேர் கைது..!!! யாருக்கு..?? தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்..!!

உதவிய குற்றத்திற்காக 9 பேர் கைது..!!! யாருக்கு..?? தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்..!!

சிங்கப்பூரில் அதிகரித்து வரும் போலி நிறுவனங்களானது தற்போது உதவிக்காக ஒரு குழு அமைத்துள்ளது.

செல் நிறுவனங்களை பதிவு செய்தும், குற்றவியல் கும்பல்களுக்கு தொலைபேசி அட்டைகளை பொய்யாக பதிவு செய்வதில் 9 பேர் கொண்ட ஒரு குழு உதவியுள்ளது.

ஊழல் தடுப்பு பிரிவு செப்டம்பர் 18 முதல் 26 வரை சிங்கப்பூர் முழுவதும் நடத்திய அமலாக்க சோதனையின் போது இந்த குற்றத்தை கண்டுபிடித்தது.

இதில் 9 பேர் கொண்ட ஒரு குழுவில் 8 ஆண்களையும் ஒரு பெண்ணையும் காவல்துறை சந்தேகத்தில் கைது செய்தது.

முதற்கட்ட சாரணையின் போது, குற்றவியல் குழுவிற்காக அவர்கள் 90 முதல் 480 தொலைபேசி அட்டைகளை பதிவு செய்துள்ளதாகவும், ஒவ்வொரு நபருக்கும் 500 முதல் 1,700 யுவான் வரை லஞ்சம் கிடைத்ததாகவும் தெரியவந்தது.

முதலில் போலி நிறுவனத்தை அமைத்து அந்த நிறுவனத்தின் பெயரில் போலி ஆதாரத்துடன் மொத்தமாக தொலைபேசி அட்டைகளை வாங்கி, குற்றவியல் குழுவிடம் கொடுத்து தொலைபேசி அட்டைகளை ஒப்படைக்குமாறு அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

மோசடி, சட்டவிரோத கடன் மற்றும் விபச்சாரம் உள்ளிட்ட பல்வேறு சட்டவிரோத நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக உள்ளூர் தொலைபேசி அட்டைகள் மற்றும் மின்னணு சிம் அட்டைகள் பெரும்பாலும் குற்றவியல் குழுக்களால் தகவல் தொடர்பு கருவிகளாக தவறாக பயன்படுத்துவதற்காக வாங்கப்பட்டது என்பதை காவல்துறை சுட்டிக்காட்டி உள்ளது.

இந்த குற்றம் குறித்து வழக்கு விசாரணை நடந்து வருகிறது.

குற்ற செயல்களுக்கு பயன்படுத்தப்படும் என்று தெரிந்தும் நிதி ஆதாயத்திற்காக சிம்காடை வேறொருவருக்கு மாற்றுபவருக்கு $10,000 வரை அபராதம், 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம் என்பதை போலீசார் தெரிவித்துள்ளனர்.

ஒரு நிறுவன இயக்குனர் அவரது கடமைகளை செய்ய தவறும் போது அவருக்கு 5,000 வரை அபராதமும் அல்லது 12 மாதங்கள் வரை சிறை தண்டனையும் விதிக்க வாய்ப்பு உள்ளது.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK