பெண்களுக்காக முதல் முறையாக நடத்தப்படும் உலகக் கிண்ண கால்பந்து போட்டி.!!

பெண்களுக்காக முதல் முறையாக நடத்தப்படும் உலகக் கிண்ண கால்பந்து போட்டி.!!

பெண்கள் கால்பந்து வரலாற்றில் முதன்முறையாக நடைபெறும் உலகக் கிண்ண வெற்றியாளர் போட்டியில், சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு சுமார் 2.3 பில்லியன் டாலர் பரிசுத்தொகை வழங்கப்படும் என உலக கால்பந்து சம்மேளனமான விவா (FIFA) அறிவித்துள்ளது.

பெண்கள் கால்பந்து போட்டிகளுக்காக இதுவரை அறிவிக்கப்பட்ட மிகப்பெரிய பரிசுத்தொகை இதுவாகும். இதன் மூலம் பெண்கள் விளையாட்டுகளுக்கு வழங்கப்படும் முக்கியத்துவம் மேலும் உயர்ந்துள்ளதாக விளையாட்டு வல்லுநர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

இந்த உலகக் கிண்ண வெற்றியாளர் போட்டி பெண்களுக்கான கால்பந்து போட்டியில் முதல் முறையாக நடத்தப்படுகிறது. எனவே உலகின் முன்னணி அணிகள் இதில் பங்கேற்று, வெற்றிக்காக கடும் போட்டியை எதிர்கொண்டு வருகின்றன.

போட்டிகளின் அட்டவணைப்படி, அரையிறுதி ஆட்டங்கள் வரும் புதன்கிழமை(28.01.26) நடைபெற உள்ளன. அதனைத் தொடர்ந்து, முதல் மற்றும் மூன்றாம் இடங்களுக்கான ஆட்டம் பிப்ரவரி முதல் (01.02.26) தேதியில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த போட்டி, பெண்கள் கால்பந்தின் வளர்ச்சிக்கு புதிய திருப்புமுனையாக அமையும் என்றும், இளம் விளையாட்டு வீராங்கனைகளை ஊக்குவிக்கும் வகையில் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK