காமன்வெல்த் 2026: சிங்கப்பூருக்கு முதல் பதக்கம்...! 16 வயது அமண்டா யாப் அசத்தல்!
கிளாஸ்கோ: ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் 2026 காமன்வெல்த் (Commonwealth Games) விளையாட்டுப் போட்டிகளில், சிங்கப்பூர் தனது முதல் பதக்கத்தைக் கைப்பற்றி நாட்டிற்குப் பெருமை சேர்த்துள்ளது.
16 வயதையான இளம் வீராங்கனை அமண்டா யாப் பெண்களுக்கான சீருடற்பயிற்சி (Gymnastics) பேலன்ஸ் பீம் பிரிவில் வெள்ளி பதக்கத்தை உறுதி செய்த சாதனை படைத்துள்ளார்.
ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் உள்ள தி அரேனா (The Arena) மைதானத்தில் இப்போட்டி நடைபெற்றது. இறுதிப் போட்டியில் மிக நேர்த்தியாக செயல்பட்ட அமண்டா யாப் 13.233 புள்ளிகள் பெற்று இரண்டாம் இடம் பிடித்துள்ளார்.
போட்டிக் களம் மற்றும் வெற்றி: உலகெங்கிலும் உள்ள காமன்வெல்த் நாடுகளைச் சேர்ந்த தலைசிறந்த விளையாட்டு வீரர்கள் பங்கேற்றுள்ள இந்தப் தொடரில், தொடக்கம் முதலே சிங்கப்பூர் வீரர்கள் தீவிர திறமையை வெளிப்படுத்தி வந்தனர்.
தற்போது கிடைத்துள்ள இந்த முதல் பதக்கத்தின் மூலம், சர்வதேச விளையாட்டு அரங்கில் சிங்கப்பூரின் பங்களிப்பும் திறமையும் மீண்டும் ஒருமுறை உலக அளவில் நிரூபிக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூர் தனது முதல் பதக்கக் கணக்கைத் தொடங்கியுள்ளதைத் தொடர்ந்து, அந்நாட்டு விளையாட்டு அமைச்சகம் மற்றும் விளையாட்டு பிரியர்கள் வீரர்களுக்குத் தங்களது வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர்.
இந்த வெற்றியின் மூலம் 2010 காமன்வெல்த் போட்டியில் வெள்ளி வென்ற லிம் ஹீம் வெய்யின் சாதனையை அமண்டா சமன் செய்துள்ளார். 2014 ஆம் ஆண்டுக்குப் பிறகு காமன்வெல்த் ஜிம்னாஸ்டிக் போட்டியில் சிங்கப்பூர் பெரும் முதல் பதக்கம் இதுவே ஆகும்.
பிரதமர் லாரன்ஸ் வோங் உள்ளிட்ட பல தலைவர்கள் இந்த வரலாற்று வெற்றியைப் பாராட்டி, இது சிங்கப்பூருக்கு ஒரு பெருமிதமான தருணம் என்று குறிப்பிட்டுள்ளனர்.