சிங்கப்பூரில் பரபரப்பை ஏற்படுத்திய மோதல்..!! 25 வயது ஆடவருக்கு என்ன தண்டனை?

சிங்கப்பூரில் 2024ஆம் ஆண்டு நடந்த கிச்சனர் ரோடு மோதல் சம்பவத்தில், மற்றொரு குழுவைச் சேர்ந்தவரைக் கடுமையாகத் தாக்கிய 25 வயது சதிஷ் ஜேசன் பிரபாஸுக்கு ஓராண்டு 10 மாதங்கள் சிறைத்தண்டனையும் நான்கு பிரம்படிகளும் விதிக்கப்பட்டுள்ளன.
அக்டோபர் 28ஆம் தேதி நீதிமன்றத்தில் தண்டனை விதிக்கப்பட்ட சதிஷ், நவீன்ஜெய் சி. நாதனுக்குக் கடுமையான காயம் ஏற்படுத்திய குற்றத்தை ஒப்புக்கொண்டார். பாதிக்கப்பட்டவருக்கு 700 சிங்கப்பூர் வெள்ளிக்கு மேல் இழப்பீடு வழங்கவும் அவருக்கு உத்தரவிடப்பட்டது.
2024 செப்டம்பர் 22ஆம் தேதி அதிகாலை சுமார் 4 மணியளவில், சாம் லியோங் சாலை பகுதியில் இரு குழுக்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது மதுபோதையில் இருந்த சதிஷ், தனது குழுவினருடன் தனியார் வாடகை வாகனத்தில் அங்கு வந்திருந்தார்.
அங்கு ஏற்கெனவே மற்றொரு குழுவைச் சேர்ந்தவர்களுக்கும் சில பெண்களுக்கும் இடையே ஏற்பட்டிருந்த குழப்பம் பின்னர் மோதலாக மாறியது. இந்தச் சம்பவத்தில் சதிஷ் உள்ளிட்ட பலர் ஈடுபட்டனர்.
மோதலின்போது சதிஷ், நவீன்ஜெய்யைக் காலால் உதைத்ததுடன், அவரது முகத்திலும் தாக்குதல் நடத்தியதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
இதற்கிடையே, அந்தக் குழுவைச் சேர்ந்த கிர்த்திக் ரோஷன் பிரேம் ஆனந்த், நவீன்ஜெய்யின் உடலில் நாற்காலியால் தாக்கியதாகவும் கூறப்பட்டது. பின்னர் நவீன்ஜெய் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
சதிஷ் தாக்குதலின்போது எந்த ஆயுதத்தையும் பயன்படுத்தவில்லை என்று அவரது வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
இந்த மோதலில் 25 வயது தினேஷ் வாசீ காயமடைந்து உயிரிழந்தார். இருப்பினும், தினேஷைச் சதிஷ் தாக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.
இந்த வழக்கில் தினேஷைத் தாக்கிய பிரதேவ் சசி குமாருக்கு முன்னதாக ஓராண்டு ஐந்து மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. தினேஷின் மரணம் தொடர்பாக முகம்மது சஜித் சலீம் மீது கொலைக் குற்றம் சுமத்தப்பட்டுள்ள நிலையில், அவருடைய வழக்கு நிலுவையில் உள்ளது.
மேலும், இந்த மோதலில் தொடர்புடைய கிர்த்திக் ரோஷன் பிரேம் ஆனந்த் மீதான வழக்கும் தொடர்கிறது.
இந்தச் சம்பவம் தொடர்பான நீதிமன்ற நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
Follow us on :
Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship
WHATSAPP CHANNEL LINK
