ரமலான் பண்டிகை: 2026 எப்போது தொடங்க உள்ளது?

ரமலான் பண்டிகை: 2026 எப்போது தொடங்க உள்ளது?

2026 ஆம் ஆண்டு ரமலான் எப்போது தொடங்க உள்ளது என்பதை குறித்த தகவலை இந்த செய்தியில் தெரிந்து கொள்ளலாம்.

ரமலான் மாதத்தில் நோன்பு இருப்பது என்பது ஒவ்வொரு முஸ்லிம்களுக்கும் கட்டாயமான ஒன்றாக கருதப்படுகிறது. எனவே இந்த ஆண்டும் இந்த புனித மாதம் தற்போது வர உள்ள நிலையில் அதன் தேதி எப்போது என இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

ஷாபான் மாதம் 29ஆம் தேதி சந்திரனை பார்ப்பதன் அடிப்படையாக ரமலான் மாதத்தின் தொடக்கமானது முடிவு செய்யப்படுகிறது. இந்த நாளில் சந்திரன் தெரிந்தால் மறுநாள் ரமலான் மாதத்தின் முதல் நோன்பு கடைபிடிக்கப்படும். ஆனால் 29ஆம் தேதி சந்திரன் தெரியவில்லை எனில் ரமலான் ஒருநாள் சென்ற பிறகு தொடங்கும்.

பிற நாடுகளில் எப்போது தொடங்கப்படும்?
சவுதி அரேபியா மற்றும் வளைகுடா நாடுகளில் 2026 ஆம் ஆண்டின் முதல் நோன்பு பிப்ரவரி 18ஆம் தேதி தொடங்கலாம். அதே நேரத்தில் இந்தியா பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளில் ரமலான் பிப்ரவரி 19ஆம் தேதி தொடங்கலாம் என தெரியவந்துள்ளது.

ஈத் -உல் -பித்ர்: ஈத் எப்போது கொண்டாடுவர்?
இந்த தேதியும் சந்திரனை பார்ப்பதை பொறுத்து தான் தேதி முடிவு செய்யப்படும். ஒருவேளை ரமலான் 29ஆம் தேதி மாலையில் ஷவால் சந்திரன் காணப்பட்டால் மறுநாள் ஈத் கொண்டாடப்படும்.

இது ஒரு நாள் கழித்த பிறகு கொண்டாடப்படுகிறது 2026 ஆம் ஆண்டில் ஈத் மார்ச் 21ஆம் தேதி அன்று கொண்டாடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரமலான் மாதம் சிறப்பு வாய்ந்ததன் காரணம் என்ன?
இஸ்லாமியரின் புனித நூலான குர் ஆன் ஷெரீஃப், புனித ரமலான் மாதத்தில் உலகிற்கு வந்ததாக கருதப்படுகிறது. இஸ்லாமிய மதத்தினரின் நம்பிக்கைப்படி, கிபி 610 ஆம் ஆண்டு ரமலான் மாதத்தின் உடைய ஒரு இரவில் இஸ்லாமிய கடவுளான அல்லாஹ் குர் ஆனின் முதல் வசனங்களை கேப்ரியல் என்பவர் தேவதை மூலமாக முகமது நபிக்கு வெளிப்படுத்தியுள்ளார்.

ரமலான் என்பது “நற்செயல்களின் பருவம்” என அழைக்கப்படுகிறது. ரமலான் மாதத்தில் ரமலான் தொடங்கியவுடன் சொர்க்கத்தின் கதவுகள் திறக்கும் எனவும், இந்த மாதத்தில் செய்யப்படும் நற்செயல்களுக்கான பலன்களும் பல மடங்கு அதிகமாக இருக்கும் எனவும் கூறப்படுகிறது.

ரமலான் நோன்பு பற்றிய முக்கிய குறிப்பு:
தொடங்குவது: பிப்ரவரி 17/18, 2026 அன்று முதல் நோன்பு விரதம் ஆனது தொடங்கும்.

சந்திர தரிசனம்: பிப்ரவரி 17 பிறை தெரிந்தால் பிப்ரவரி 18 முதல் நோன்பு தொடங்கும்.
கால அளவு: தினமும் சுமார் 13 மணி நேரம் 25 நிமிடங்கள் வரை நோன்பு நேரம் இருக்கக்கூடும்.


முடிவு: ரமலான் மாதம் மார்ச் 18 அல்லது 19, 2026 அன்று முடிவடைந்து அதற்குப் பிறகு, ஈத் – உல் – பித்ர் என்ற நோன்பு பெருநாள் கொண்டாடப்படும். அதாவது ரமலான் நோன்பு சரியாக ஒரு மாத கால அளவு கடைபிடிக்கப்படும்.


பண்டிகை காலம்: ரமலான் கொண்டாட்டம் ஆனது உலகம் எங்கும் உள்ள முஸ்லிம்களுக்கு பிரார்த்தனை நோன்பு மற்றும் ஆன்மீக பிரதிபலைப்பின் காலமாக அமையும்.

ரமலான் பண்டிகையானது பிறை, பார்ப்பது பொறுத்து ஒருநாள் முன்னதாகவோ அல்லது பின்னதாகவோ மாற வாய்ப்புள்ளது.

ரமலான் மாதத்தில் கடைபிடிக்கப்படும் விரதம் என்பது பசி, தாகம் ஆகியவற்றை மட்டும் குறிக்காமல் கண்கள், காதுகள், நாக்கு மற்றும் மனதின் கட்டுப்படுத்தக்கூடிய விரதமாக கடைபிடிக்கப்படுகிறது.

இந்த மாதத்தில் “ஜகாத்” கொடுப்பது மிகவும் சிறந்ததாக கூறப்படுகிறது. “ஜகாத்” என்பதன் பொருள் “தர்மம்”ஆகும்.

முக்கிய குறிப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் மத நம்பிக்கைகள் மற்றும் நாட்டுப்புற நம்பிக்கைகளை அடிப்படையாகக் கொண்ட நோக்கில் எடுக்கப்பட்டுள்ளதாகும்.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK