பெண்கள் கழிவறைக்குள் மறைந்திருந்து ரகசியமாகக் காணொளி எடுத்த ஆடவர்..! 6 மாதங்கள் சிறைத் தண்டனை விதித்த நீதிமன்றம்!

சிங்கப்பூரில் பெண்கள் கழிவறைக்குள் ரகசியமாக நுழைந்து, பெண்கள் கழிவறையைப் பயன்படுத்தும் காட்சிகளைத் தனது கைப்பேசியில் ரகசியமாகப் பதிவு செய்த 31 வயது ஆடவருக்கு ஆறு மாதங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஏழு மாதங்களாகத் தொடர்ந்து பெண்களைக் குறிவைத்து இத்தகைய செயல்களில் ஈடுபட்டு வந்த அவரது நடவடிக்கை நீதிமன்றத்தில் அம்பலமாகியுள்ளது.
Syabillilah Azzulfiqqar Bin Azaman என்ற 31 வயது ஆடவர், சாங்கி சிவில் சர்வீஸ் கிளப்பில் (Changi Civil Service Club) உள்ள பந்துவீச்சு அரங்கிற்கு அருகிலுள்ள கழிவறையில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படவில்லை என்பதைக் கவனித்துள்ளார்.
இதனைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ளத் திட்டமிட்ட அவர், பெண்கள் கழிவறைக்குள் ரகசியமாக நுழைந்து, பெண்கள் கழிவறையைப் பயன்படுத்தும் காட்சிகளைப் பதிவு செய்யத் தொடங்கியுள்ளார்.
பொதுவாக நள்ளிரவு அல்லது அதிகாலை நேரங்களையே அவர் இதற்காகத் தேர்ந்தெடுத்துள்ளார். அந்த நேரங்களில் கிளப்பில் மக்கள் நடமாட்டம் குறைவாக இருக்கும் என்பதால், தாம் பிடிபடுவதற்கான வாய்ப்பு குறைவு என்று அவர் கருதியுள்ளார்.
பெண்கள் கழிவறைக்குள் நுழைந்ததும் நடுவிலுள்ள கழிப்பறைக் cubicle-க்குள் மறைந்துகொள்வது அவரது வழக்கமாக இருந்துள்ளது.
அருகிலுள்ள cubicle-ஐப் பெண்கள் பயன்படுத்தும்போது, அவர்களுக்குத் தெரியாமல் தனது கைப்பேசி மூலம் காணொளிகளைப் பதிவு செய்துள்ளார்.
மேலும், பதிவு செய்த காணொளிகளைப் பார்த்து சுயஇன்பத்திலும் ஈடுபட்டதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2024ஆம் ஆண்டு அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் மட்டும் மூன்று முறை பெண்கள் கழிவறைக்குள் அத்துமீறி நுழைந்து, மொத்தம் ஏழு பெண்களின் காணொளிகளை அவர் பதிவு செய்துள்ளார்.
2024ஆம் ஆண்டு நவம்பர் 16ஆம் தேதி மீண்டும் பெண்கள் கழிவறைக்குள் நுழைந்து ரகசியமாகக் காணொளி பதிவு செய்துள்ளார்.
அன்று மூன்று பெண்களைக் காணொளி எடுத்த பின்னர், 36 வயதுடைய மற்றொரு பெண்ணைக் குறிவைத்துள்ளார். அப்போது அவரது நடவடிக்கை அந்தப் பெண்ணுக்குத் தெரியவந்துள்ளது.
இதையடுத்து அந்தப் பெண் சத்தமிட்டுக் கூச்சலிட்டு, கழிவறைக்கு வெளியே ஓடிய ஆடவரைத் துரத்திச் சென்றுள்ளார்.
அப்போது வெளியே மனைவிக்காகக் காத்திருந்த 40 வயது கணவர், மனைவியின் கூச்சலைக் கேட்டு உடனடியாக ஆடவரைப் பின்தொடர்ந்து பிடித்துள்ளார். பின்னர் காவல்துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
பிடிபட்டதும் தனது கைப்பேசியில் இருந்த ஏழு காணொளிகளையும் ஆடவர் உடனடியாக அழித்துள்ளார். இருப்பினும், காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையின்போது அவற்றில் நான்கு காணொளிகளை மீட்டெடுக்க முடிந்தது.
மேலும், 2024 அக்டோபர் 20ஆம் தேதி ஒரு பெண்ணையும், நவம்பர் 9ஆம் தேதி மூன்று பெண்களையும், நவம்பர் 16ஆம் தேதி மேலும் மூன்று பெண்களையும் ரகசியமாகப் பதிவு செய்ததை அவர் ஒப்புக்கொண்டுள்ளார்.
இந்த வழக்கில் 31 வயதான Syabillilah Azzulfiqqar Bin Azaman, ரகசியமாகக் காணொளி பதிவு செய்த குற்றச்சாட்டுகளில் ஒன்றை ஒப்புக்கொண்டார். மேலும் இரண்டு குற்றச்சாட்டுகள் தண்டனை விதிக்கும்போது நீதிமன்றத்தின் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டன.
இதையடுத்து, 2026 அக்டோபர் 30ஆம் தேதி அவருக்கு ஆறு மாதங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
பெண்களின் தனியுரிமையை மீறி, அவர்களுக்குத் தெரியாமல் கழிவறைக்குள் காணொளி பதிவு செய்த சம்பவம் சிங்கப்பூரில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.
Follow us on :
Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship
WHATSAPP CHANNEL LINK
