எச்சரிக்கை..!!45 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் கவனிக்க வேண்டியது என்ன..??

எச்சரிக்கை..!!45 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் கவனிக்க வேண்டியது என்ன..??

சிங்கப்பூர்:கே.கே பெண்கள் மற்றும் குழந்தைகள் மருத்துவமனை நடத்திய சமீபத்திய ஆய்வில், சிங்கப்பூரில் 10 பெண்களில் 7 பேர் மிதமானது முதல் கடுமையான மாதவிடாய் நிறுத்த அறிகுறிகளை அனுபவிப்பதாக தெரியவந்துள்ளது. அதிலும் 70% பெண்கள் மருத்துவ உதவி நாடாமல் அமைதியாகவே அவற்றைத் தாங்கிக் கொள்கிறார்கள் என்பது கண்டறியப்பட்டுள்ளது.

குறிப்பாக 45 முதல் 65 வயதுடைய 1,461 பெண்களிடம் மேற்கொண்ட கணக்கெடுப்பில், கிட்டத்தட்ட அனைவரும் குறைந்தது ஒரு மாதவிடாய் நிறுத்த அறிகுறியாவது அனுபவித்ததாக தெரிவித்துள்ளனர். அவர்கள் எடை அதிகரிப்பு, தலைவலி, தூக்கக் கோளாறு, மூட்டு மற்றும் தசை வலி போன்ற பிரச்சனைகளை சந்தித்துள்ளதாக தெரிவித்தனர்.

இதற்கிடையில், 262 சுகாதாரப் பணியாளர்களிடம் நடத்தப்பட்ட மற்றொரு ஆய்வில் 90% பேருக்கு மாதவிடாய் நிறுத்த அறிகுறிகளை சரியாக கண்டறிந்து சிகிச்சையளிக்க நம்பிக்கை இல்லையெனத் தெரியவந்துள்ளது. தேவையான பயிற்சி மற்றும் நேரமின்மை முக்கிய காரணங்களாக குறிப்பிடப்பட்டுள்ளன.

இந்த நிலையை மாற்றுவதற்காக, கே.கே. மருத்துவமனை மாதவிடாய் நிறுத்த மாற்றத்தை நிர்வகிக்கும் முதல் உள்ளூர் வழிகாட்டுதலை அறிமுகப்படுத்தியுள்ளது. பரிசோதனை முதல் சிகிச்சை வரை ஒருங்கிணைந்த பராமரிப்பு நடைமுறைகளை இது வழங்குகிறது.

மாதவிடாய் நின்ற ஹார்மோன் சிகிச்சை குறித்து பெண்களுக்கு உள்ள பயம் இன்னும் நீங்கவில்லை. ஆனால், பொருத்தமான வயதில் மேற்கொள்ளப்படும் ஹார்மோன் சிகிச்சை அறிகுறிகளை குறைத்து, எலும்பு மெலிவு (ஆஸ்டியோபோரோசிஸ்) அபாயத்தையும் குறைக்கும் என நவீன மருத்துவம் உறுதிப்படுத்துகிறது.

மருத்துவ நிபுணர்கள், மாதவிடாய் நின்ற பெண்கள் கால்சியம் மற்றும் வைட்டமின் டி நிறைந்த உணவுகளை உட்கொள்ளவும், உடற்பயிற்சி, புகைபிடிக்காமை, மது அருந்தலை குறைத்தல் போன்ற ஆரோக்கியமான வாழ்க்கை முறைகளைப் பின்பற்றவும் பரிந்துரைக்கின்றனர். விழிப்புணர்வே பாதுகாப்பிற்கான முதல் படியாகும் என்பதே இந்த ஆய்வின் முக்கியச் செய்தியாகும்.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK