ஜப்பானில் 21 கிலோ தங்கத்தை வாரி வழங்கிய கொடை வள்ளல்..!!

ஜப்பானில் 21 கிலோ தங்கத்தை வாரி வழங்கிய கொடை வள்ளல்..!!

ஜப்பானின் ஒசாகா நகரில் பெயர் குறிப்பிட விரும்பாத ஒரு கொடை வள்ளல், 21 கிலோ தங்கத்தை நன்கொடையாக வழங்கி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார். தங்கத்தின் மொத்த மதிப்பு சுமார் 3.6 மில்லியன் அமெரிக்க டாலர், (S$4.5 மில்லியன் ) என மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்தப் பெரும் நன்கொடை, நகரின் பழமையான நீர்க்குழாய் அமைப்புகளைச் சீரமைக்கும் பணிக்காக வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன் கடந்த அக்டோபர் மாதம் 3,300 டாலரை (S$16,876)நீர்க்குழாய் பராமரிப்பிற்காக அவர் வழங்கியிருந்தார்.

“இது நம்பமுடியாத அளவு பெரிய தொகை,” என்று நகர மேயர் தெரிவித்தார். நன்றியை வெளிப்படுத்த வார்த்தைகளே இல்லை என்றும், இந்தச் செயல் தன்னை அதிர்ச்சியில் உறைய வைத்ததாகவும் அவர் கூறினார்.

சுமார் 2.8 மில்லியன் மக்கள் வசிக்கும் ஒசாகாவில் பழைய குடிநீர் குழாய்களை மாற்றும் பணி சில காலமாக நடைபெற்று வருகிறது. ஆனால் திட்டமிட்டதை விட செலவு அதிகரித்ததாலும், பல இடையூறுகள் ஏற்பட்டதாலும் பணி சிரமமாக இருந்ததாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், பெயர் தெரியாத இந்த நன்கொடையாளர் வழங்கிய தங்கம் நகரின் திட்டத்திற்கு பெரும் ஊக்கமாக அமைந்துள்ளது. அவருக்குப் பொதுமக்கள் மத்தியில் பாராட்டு மழை குவிகிறது.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK