50 வயதுக்கு மேற்பட்டவர்கள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டியவை..!!!
சிங்கப்பூர்:சிங்கப்பூரில் மேற்கொள்ளப்பட்ட சமீபத்திய ஆய்வில் மூத்தோரில் மூன்று பேரில் ஒருவர் கண்ணில் ஏற்படக்கூடிய குறைந்தபட்ச நோய் பற்றி அறியாமல் இருப்பது தெரிய வந்துள்ளது. அதேபோல், ஐவரில் ஒருவர் செவிப்புலன் குறைபாடு கொண்டிருந்தாலும் பெரும்பாலோர் காதுகேட்புக் கருவியைப் பயன்படுத்தவில்லை என்பது கண்டறியப்பட்டது.
இந்த ஆய்வை சிங்கப்பூர் கண் ஆராய்ச்சி நிறுவனம் (SERI)நடத்தியது.பார்தல், கேட்டல், வாசனை அறிதல் ஆகியன தொடர்பான குறைபாடுகள் மூத்தோரிடையே பரவலாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.இதனை “முப்புலன் இழப்பு” என்று அழைக்கின்றனர்.
ஆய்வில், மூத்தோர் ஐவரில் ஒருவருக்கு ஒரு வகையான முப்புலன் இழப்பு இருப்பதால், அவர்கள் அன்றாடச் செயல்பாடுகளில் சிரமங்களை எதிர்கொள்கிறார்கள். இதனால் அவர்களின் சுகாதாரப் பராமரிப்பு செலவுகள் மற்றவர்களைவிட நான்கு முதல் ஆறு மடங்கு வரை அதிகமாக உள்ளது.
இந்த ஆய்வில் சீன, மலாய், இந்திய இனங்களைச் சேர்ந்த 2,636 முதியோர் கலந்துகொண்டனர். அவர்கள் வயது 60 முதல் 102 வரை இருந்தது. இந்த ஆய்வானது கடந்த 2017 டிசம்பர் முதல் 2022 அக்டோபர் வரை நடைபெற்றது.
கடந்த இரண்டரை ஆண்டுகளில் 17 ஆய்வுக் கட்டுரைகள் வெளியிடப்பட்டுள்ளன. அண்மைய கட்டுரை செவிப்புலன் குறைபாடு பரவல் மற்றும் அபாயக் காரணிகள் தொடர்பானது. அந்தக் கட்டுரை விரைவில் வெளியிடப்பட உள்ளது.
ஆய்வை முன்னெடுத்து நடத்திய பேராசிரியர் லாமோரியக்ஸ் கூறியதாவது,“வயதாகும்போது, உடல், இருதயம், சுவாசக் குழாய், தசை, மூளை மற்றும் புலன்கள் ஒரே நேரத்தில் வயதாகின்றன. ஒவ்வொரு குறைபாடுகளும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையதாக இருக்க வாய்ப்பு உள்ளது. முழுமையான, விரிவான அணுகுமுறை மூத்தோர் நீண்ட நாள் நல்ல சுகாதாரத்தில் வாழ வழி வகை செய்யும் ”என்று கூறினார்.