டாக்சி கட்டணம் குறித்த முக்கிய அப்டேட்..!!

டாக்சி கட்டணம் குறித்த முக்கிய அப்டேட்..!!

சிங்கப்பூரில் பன்னாட்டு போக்குவரத்து நிறுவனமான கம்ஃபோர்டெல்க்ரோ (ComfortDelGro) டாக்ஸி கட்டணங்களை தற்காலிகமாக உயர்த்த உள்ளதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

மத்திய கிழக்கில் நிகழும் அசாதாரண சூழல் காரணமாக எரிபொருட்களின் விலையானது அதிகரித்துக் கொண்டே வருகிறது. எரிபொருட்களின் அதிக விலையின் காரணமாக கம்ஃபோர்டெல்க்ரோ நிறுவனம் ஆனது டாக்ஸி ஓட்டுனர்களின் நலன் கருதி டாக்ஸி கட்டணங்களை உயர்த்த உள்ளதாக நேற்று (மார்ச் 17) அறிவித்துள்ளது.

இந்த கட்டண உயர்வானது மார்ச் 24 முதல் மே 31 வரை நடைமுறையில் இருக்கும் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. CDG Zig செயலி மூலம் பதிவு செய்யப்படும் டாக்ஸிகளுக்கும் இந்த கட்டண உயர்வானது பொருந்தும்.

கட்டண உயர்வு பற்றிய விவரங்கள்:
👉🏻கம்ஃபோர்ட் டாக்சிகளுக்கு 26 காசில் இருந்து 36 காசாக உயர்வு.
👉🏻லிமோசோம் டாக்ஸிகளுக்கு 36 காசிலிருந்து 37 காசாக உயர்வு.
👉🏻 $15 குறைவான பயணங்களுக்கு ஓட்டுநர் கட்டணம் $0.05.
👉🏻 $15 அல்லது அதற்கு மேற்பட்ட பயணங்களுக்கு ஓட்டுநர் கட்டணம் $0.80.
👉🏻ஒவ்வொரு மீட்டருக்கும் $0.01டாக்ஸி கட்டணம் அதிகம்.

ஓட்டுநர்களின் செயல்பாட்டு நிலையை பாதுகாக்கும் வகையில் உயர்த்தப்பட்ட கட்டணங்கள் அனைத்தும் ஓட்டுநனர்களுக்கு கொடுக்கப்படும் என்று கம்ஃபோர்ட்டெல்க்ரோவின் இடைநில்லா போக்குவரத்துச் சேவை தலைவர் மைக்கல் ஹூவாங் கூறியுள்ளாார்.

எரிபொருள்களின் விலை அதிகமாக இருக்கும் காரணத்தால் இந்த கட்டண உயர்வானது எரிபொருளின் செலவுகளை குறைக்கும் என்றும், இந்த கட்டண உயர்வால் பெரிதாக லாபம் ஒன்றுமில்லை என்றும் டாக்சி ஓட்டுநர்கள் அவர்களது கருத்துக்களைக் கூறியுள்ளனர்.

மேலும் சில டாக்சி ஓட்டுநர்கள் டாக்சி கட்டணங்களைக் குறைப்பதே தங்களுக்கு நல்லது என்றும் தெரிவித்தனர்.

கட்டண உயர்வு குறித்து பயணிகள் கூறியதாவது:
கட்டண உயர்வானது முன்பே அதிகம் தான் என்றும், அதனால் டாக்ஸியில் நள்ளிரவில் மட்டும் செல்லப்போவதாக ஒரு பெண் பயணி கூறியுள்ளார்.

மேலும் இந்த கட்டண உயர்வானது மிகக் குறைவாகவே இருப்பதாகவும், அதனால் அதன் விளைவானது குறைவாகவே இருக்கும் என்றும் சில பயணிகள் கூறியுள்ளனர்.

கட்டண உயர்வு என்பது நல்ல முடிவு என்றும், இதனால் டாக்ஸி மற்றும் தனியார் வாடகை கார் ஓட்டுநர்களுக்கு இது பெரும் உதவியாக இருக்கும் என்றும் பலர் கூறுகின்றனர்.

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK