சிங்கப்பூரில் உள்ள ஒரு சாலை சந்திப்பில் இரு சக்கர வாகனங்கள் எதிரெதிரே மோதி விபத்துக்குள்ளானது.
இது குறித்த வீடியோ பதிவானது, SGRV பேஸ்புக் வலைதளத்தில் பதிவிடப்பட்டுள்ளது. அதில் ஒரு மோட்டார் சைக்கிள் திரும்பிக் கொண்டிருந்த போது நேராகச் சென்ற மற்றொரு மோட்டார் சைக்கிள் திடீரென நேருக்கு நேர மோதி நேராக சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிளினுடைய பின்புறத்தில் இருந்த சரக்கு பெட்டி வெளியே தூக்கி எறியப்பட்டுள்ளது.
இரண்டு மோட்டார் சைக்கிள்களும் தரையில் விழுந்து அதில் பயணித்த இருவரும் சாலையில் விழுந்து கிடந்தனர்.
சிங்கப்பூர் குடிமை தற்காப்பு படையினர் விபத்து நடந்த இடத்திற்கு விரைந்து வந்தபோது, இந்த விபத்தானது நேற்று(மார்ச் 25) காலை சுமார் 10:55 மணியளவில் ஏற்பட்டது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.