சிங்கப்பூரில் நடந்த Scam..!! காவல்துறை கூறிய அறிவுரை..!! யாருக்கு..??

சிங்கப்பூரில் நடந்த Scam..!! காவல்துறை கூறிய அறிவுரை..!! யாருக்கு..??

சிங்கப்பூரில் கடந்த சில நாட்களாக மோசடி சம்பவங்கள் அதிகரித்து வரும் சூழலில் காவல்துறை பொதுமக்களுக்கு சில அறிவுரை வழங்கியுள்ளது. மேலும் ஒரு முக்கிய தகவலை இன்று (மார்ச் 27) சிங்கப்பூர் காவல்துறை அறிக்கை வெளியிட்டு இருக்கிறது.

சிங்கப்பூர் தபால் துறையை அதிகாரிகள் போல் நடித்து சில வாட்சப் செய்திகள் மூலமாக பொதுமக்களை ஏமாற்றியுள்ளனர். இது குறித்த புகார் ஆனது காவல்துறையினருக்கு வந்ததை அடுத்த விசாரிக்க ஆரம்பித்தனர்.

அவ்வப்போது மார்ச் 15ஆம் தேதி முதல் இது போன்ற சம்பவங்கள் குறைந்தபட்சம் 10 புகார்கள் வந்துள்ளது எனவும் இதன் மூலமாக பொதுமக்கள் கிட்டத்தட்ட 22,000 டாலர் இழந்துள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்த வகையான மோசடி பிஷிங் மோசடிகள் என தெரியவந்துள்ளது. என்ன மோசடியில் பார்சல்கள் இன்னும் வந்து சேரவில்லை என whatsapp செய்திகள் அனுப்பி சிங்கப்பூர் தபால் துறை அதிகாரிகள் போல் நடித்த பின்னர் அந்தச் செய்திகளில் இருக்கும் இணைப்புகளை பயன்படுத்தி பாதிக்கப்பட்டவர்களுடைய பிஷிங் இணையதளங்களுக்கு அவர்களை கவனம் ஈர்த்து பின்னர் அவர்களுடைய வங்கி தகவல்களை எடுத்து அதிலிருந்து பணத்தை திருடுகின்றனர்.

அவர்களுக்கு அந்த இணைப்பு சென்றவுடன் அதை கிளிக் செய்தால் அதிலிருந்து வங்கி கணக்கு தகவல் கடன் அட்டை விவரங்கள் மற்றும் ஒரு முறை பயன்படுத்தும் கடவுச்சொற்கள்(otp) என அனைத்தையும் உள்ளிடுமாறு விவரங்கள் கேட்கப்படுகிறது.

இதன் மூலமாக ஏமாற்றுக்காரர்கள் பணத்தை திருட முடிகிறது. ஏமாற்றம் அடைந்தவர்களுக்கு அங்கீகரிக்கப்படாத வெளிநாட்டு நாணய பரிவர்த்தனைகள் குறித்து விவரங்கள் தெரியும் போது தான் அவர்கள் பணம் இழந்த செய்தி தெரிய வருகிறது.

இது போன்ற மோசடி செய்திகள் சிங் போஸ்டில் இருந்து வருவதாக கூறி வாட்ஸ்அப் அல்லது எஸ் எம் எஸ் வழியாக அனுப்பப்படும் சந்தேகப்படும்படியான இணைப்புகளை எளிதில் நம்ப வேண்டாம் எனவும் காவல்துறை பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேலும் சிங்போஸ்ட் பணம் செலுத்துமாறு கேட்டோ அல்லது வங்கி விவரங்களை வழங்குமாறு கேட்டோம் whatsapp அல்லதேசம் வழியாக இணைப்புகளை அனுப்ப மாட்டார்கள்.

எனவே வங்கி கணக்கு விபரங்கள் கடன அட்டை தகவல்கள் மற்றும் ஒரு முறை பயன்படுத்தும் கடவுச்சொற்கள் உள்ளிட்ட முக்கியமான தகவல்களை பொதுமக்கள் யாரிடமும் கூற வேண்டாம்.

இது போன்ற மோசடி தடுப்பு தொடர்புடைய கேள்விகள் ஏதேனும் பொது மக்களுக்கு இருந்தால் ஸ்கேம்ஷீல்டு உதவி எண் 1799 ஐ தொடர்பு கொண்டு விவரங்கள் தெரிந்து கொள்ளலாம்.

மேலும் www.scamshield.gov.sg என்ற இணையதளம் மூலமாக விவரங்களை அறிந்து கொள்ள முடியும் என்று காவல்துறையினர் பொது மக்களுக்கு அறிவுரை வழங்கிய உள்ளனர்.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK