டம்பைன்ஸ் விரைவு சாலையில் திடீரெனதீப்பிடித்த பேருந்து..!!

டம்பைன்ஸ் விரைவு சாலையில் திடீரென தீப்பிடித்த பேருந்து..!!

சிங்கப்பூரில் இன்று(மார்ச் 30) காலை டம்பைன்ஸ் சாலையில் இருந்து செலெட்டர் சாலையை நோக்கிச் செல்லும் வழியில் SBS transit பேருந்து திடீரென தீ விபத்துக்குள்ளானது.

SGRV FRONT MAN என்ற சமூக ஊடகத்தில் தீ விபத்து குறித்த புகைப்படங்கள் பதிவேற்றப்பட்டுள்ளது. அந்தப் பேருந்த எஸ்பிஎஸ் ட்ரான்ஸிப் நிறுவனத்தின் ஒற்றை அடுக்க பேருந்து என்று தெரியவந்துள்ளது.

சிங்கப்பூர் குடிமை தற்காப்பு படையினர் இந்த தீ விபத்து குறித்து கூறியதாவது:
இன்று (மார்ச் 30) காலை சுமார் 6.50 மணியளவில் டம்பைன்ஸ் விரைவுச் சாலையில் இருந்து செலேட்டர் விரைவுச்சாலை நோக்கி செல்லும் வழியில் இந்த தீ விபத்து ஏற்பட்டதாக தகவல் கிடைத்ததை கூறினர்.

பேருந்தின் இயந்திர பகுதியில் தீப்பிடித்து எரிந்ததாகவும், குடிமை தற்காப்பு படையினர் தண்ணீர் குழாய்களை பயன்படுத்தி தீயை அணைத்ததாகவும் கூறியுள்ளனர்.

இது குறித்த எஸ் பி எஸ் ட்ரான்சிட் நிறுவனம் தெரிவித்ததாவது:
பேருந்து எண் 53 தீ விபத்தில் சிக்கியது. பயணிகள் பின்னர் தங்கள் பயணத்தை தொடர மற்றொரு பேருந்து இருக்க மாற்றப்பட்டனர் மேலும் பாதிக்கப்பட்ட பயணிகளுக்கும் இந்த சம்பவத்தால் ஏற்பட்ட சிரமத்திற்கும் இடையூறுக்கும் SBS TRANSIT நிறுவனம் தனது வருத்தத்தை தெரிவித்திருக்கிறது.

அதிர்ஷ்டவசமாக இந்த தீ விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. தீ விபத்திற்கான காரணம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK