சிங்கப்பூர்: “லாங் ஐலண்ட் தீவு” திட்டமிடல் பணி தொடக்கம்..!!

சிங்கப்பூர்: "லாங் ஐலண்ட் தீவு" திட்டமிடல் பணி தொடக்கம்..!!

சிங்கப்பூரில் மார்ச் 3ஆம் தேதி நகர்ப்புற மறு சீரமைப்பு (URA) ஆணையம் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. லாங் ஐலண்ட் திட்டமானது, கிழக்கு கடற்கரையோர தாழ்வான பகுதிகளில் கடல் மட்ட உயர்வினால் ஏற்படுகின்ற பாதிப்பை கையாள்வதற்காக முதன்மையான நோக்கமாக கொண்ட ஒரு விரிவான திட்டம் ஆகும்.

அதே நேரத்தில் புதிய நீர்த்தேக்கங்களை கட்டுவதன் மூலமும் எதிர்கால வளர்ச்சிக்கான தேவைகளை பூர்த்தி செய்ய கூடுதல் நிலத்தை வழங்குவதன் மூலமாகவும் சிங்கப்பூரினுடைய நீர் வளத்தை மேம்படுத்தும் வகையில் உள்ளது.

நவம்பர் 2023 முதல் அதிகாரிகள் குழு விவாதங்கள், கண்காட்சிகள், இணைய வழி ஆய்வுகள், உரையாடல்கள் மற்றும் பொது பரிமாற்றங்கள் போன்றவற்றின் மூலமாக பல்வேறு தரப்பினரிடம் இருந்து பல கருத்துக்களை கோரி வருகின்றனர்.

இன்று URA வெளியிட்ட அறிக்கையில் லாங் ஐலணட் திட்டமானது மெரினா பேயின் அளவினை விட இரு மடங்கு பெரியதாகவும் 800 ஹெக்டேக்கும் அதிகமான நிலத்தை மீட்கும் பணிகளை உள்ளடக்கும் என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இதன் சம்பந்தப்பட்ட முகமைகள் கடலடி தடைகளை அகற்றுதல் மற்றும் பொருட்களை கடலுக்குள் கொண்டு செல்லுதல் உள்ளிட்ட ஆரம்பகட்ட பணிகளை பல கட்டங்களாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த ஆரம்ப கட்ட பணிகளில் மீட்பு பணிகள் எதுவும் கிடையாது. மேலும் இறுதித் திட்டமும் இன்னும் உறுதி செய்யப்படவில்லை. குறிப்பிட்ட கால அட்டவணை மற்றும் அதன் நோக்கம் இன்னும் தீர்மானிக்கப்படவில்லை. மேலும் பொதுமக்கள் மீதான பாதிப்பை குறைப்பதற்கான முயற்சிகள் இதில் மேற்கொள்ளப்படும். வரும் மாதங்களில் இது குறித்த விபரங்கள் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்த திட்டமிடல் பணியில் சுமார் 14,000 -க்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர். பன்னீர் பாலர்கள் கிழக்கு கடற்கரையை பாதுகாப்பதன் அவசரத்தை பொதுவாக ஏற்றுக் கொண்டதோடு மட்டுமல்லாது லாங் ஐலண்ட் திட்டத்தை பல தேசிய பலன்களை கொண்ட ஒரு தீர்வாகவும் இருக்கிறது என்று கருதியுள்ளனர்.

எதிர்காலத்தில் வரும் இந்த கடற்கரையானது பொழுதுபோக்கு விளையாட்டு மற்றும் குடியிருப்பு வசதிகளை உள்ளடக்கியும் பசுமை மற்றும் நீல வழிகளை ஒருங்கிணைக்கும் எனவும் பொதுமக்கள் நம்புகின்றனர்.

கடல் சார் சூழல் அமைப்புகள் மற்றும் ஓத இடைவெளி சூழல்களை உருவாக்குதல் போன்ற இயற்கை சார்ந்த அணுகு முறையையும் பாதிக்கப்பட்ட சமூகங்கள் மீதான தாக்கத்தை குறைப்பதற்காகவும் கட்டுமான பணிகளை பல கட்டங்களாக மேற்கொள்ள உள்ளதாக அவர்கள் பரிந்துரைத்துள்ளனர்.

கிழக்கு கடற்கரை பூங்காவினுடைய பொழுதுபோக்கு தன்மையை பாதுகாத்தல் புதிய கடற்கரையில் கடற்கரை பகுதிகளை அமைத்தல் மற்றும் புதிதாக கட்டப்பட்ட நீர் தேக்கத்தில் நீர் விளையாட்டு வசதிகளை உருவாக்குதல் உள்ளிட்ட இந்த பரிந்துரைகளின் சாத்தியக்கூறுகளை அதிகாரிகள் தொடர்ந்து மதிப்பீடு செய்து அதற்கான தொடக்கங்களை செய்வர்.

கிழக்கு கடற்கரை பூங்காவனது ஒரு முக்கிய பொழுதுபோக்கு இடமாகும். எனவே எதிர்கால திட்டமிடல் பொது நடவடிக்கைகளின் தேவைகளை கருத்தில் கொண்டு பொதுமக்களின் பங்கேற்பு மூலம் “லாங் ஐலேண்ட்” திட்ட வடிவமைப்பை தொடர்ந்து மேம்படுத்த வேண்டும் எனவும் அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK