Singtel பங்குகளில் புதிய மாற்றம்..!! முதலீட்டாளர்கள் கவனத்திற்கு..!!

Singtel பங்குகளில் புதிய மாற்றம்..!! முதலீட்டாளர்கள் கவனத்திற்கு..!!

சிங்கப்பூர் : சேமநிதி வாரியத்தால் தற்பொழுது நிர்வகிக்கப்பட்டு வரும் சிங்க்டெல் சிறப்பு தள்ளுபடிப் பங்குகளை மத்திய வைப்புத் தொகைக் கணக்குகளாக மாற்றப்படுவது குறித்து இன்று (ஏப்ரல் 7) நாடாளுமன்றத்தில் கூறப்பட்டுள்ளது.

அவர்கள் அந்த பங்குகளை நேரடியாக நிர்வகிக்கும் வகையில் இந்த பணிகளை Singtel நிறுவனம் தொடங்கவுள்ளது.

நாளை (ஏப்ரல் 8) முதல் சிங்க்டெல் பங்குகளை விற்க விரும்பும் சிங்கப்பூரர்கள் அவற்றைப் பணமாக பெற்றுக்கொள்ளலாம். அவ்வாறு செய்வதால் ஊழியர் சேமநிதி (EPF) அசல் திரும்பப் பெறும் நிபந்தனைகள் ரத்து செய்யப்படுகிறது.

இந்த திட்டமானது பொருளாதார வெற்றியின் பலன்களை அனைவரும் பங்குரிமையாக பெறுவதன் நோக்கில், “சிங்க்டெல் பங்கு விருப்பத்திட்டம் ” என்ற திட்டத்தை 1993 தொடங்கப்பட்டது. அது தொடங்கப்பட்ட காலகட்டத்தில் சிங்கப்பூரர்களுக்கு பங்குரிமைப் பற்றிய தகவல்கள் அதிகம் தெரியாததால், அவர்களுக்கு உதவும் வகையில் மத்திய சேமநதி (CPF) நியமிக்கப்பட்டது.

CPF உறுப்பினர்கள் 1993 மற்றும் 1996 ஆம் ஆண்டுகளில், CPF சேமிப்பைப் பயன்படுத்தி சிங்க்டெல் பங்குகளைத் தள்ளுபடி விலையில் வாங்குவதற்கு இரண்டு வாய்ப்புகளை பெற்றனர்.

சுமார் 6, 15,000 பேர் “எஸ்டிஎஸ்” பங்குகளை வைத்துள்ளனர். அவற்றின் சராசரி மதிப்பு $3.6 பில்லியன் என்பதாகும்.

ஏப்ரல் 8 ஆம் தேதி முதல் பங்குதாரர்கள் அவர்களது பங்குகளை விற்க முடிவு செய்யலாம். பங்குகளை விற்காமல் தொடர்ந்து வைத்திருக்கவும் அவர்கள் முடிவு செய்யலாம். இந்த முடிவுகள் எடுப்பதற்கு எந்த ஒரு கால அவகாசமும் இல்லை.

முன்னரே மத்திய வைப்புத் தொகைக் கணக்கு வைத்திருப்பவர்களின்  கணக்கில் பங்குகள் நேரடியாக மாற்றப்படும். கணக்கு இல்லாதவர்களுக்கு புதிய கணக்குத் தொடங்கப்பட்டு அதில் மாற்றப்படும்.

வயது மூத்த மற்றும் மத்திய வைப்புத் தொகைக் கணக்கில்லாத 20,000 பேரை நிறுவனம் பராமரிப்பு அமைப்பின் உதவியுடன் அணுகி ஆதரவளிக்க இருக்கிறது.

பங்குகளை விற்பதற்கு “பிலிப்ஸ் செக்யூரிட்டீஸ் ” என்ற இணையதளம் அல்லது சிங்போஸ்ட் கிளைகளை அணுகலாம். அல்லது தேர்ந்தெடுக்கப்பட்ட சிங்கப்பூர் பங்குச் சந்தை சில்லறைப் பங்கு வணிகர்கள் (SGX Retail Brokers) மூலமும் இந்த பங்குகளை விற்க முயற்சி செய்யலாம்.

பங்குகளை விற்றுப் பணமாக்க விரும்புவோர் விற்கப்பட்ட 14 நாட்களுக்குள் பணம், மசே நிதிக் கணக்குடன் இணைக்கப்பட்ட வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டும்.

சுமார் 6,15,000 பேர் பங்குகளை வைத்துள்ள நிலையில் அவர்கள் வயது 50 ஆக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. அதனால் மூத்தோர் தலைமுறைத் தூதர்களின் உதவியுடன் இதுகுறித்து விளக்கம் அளிக்க சிங்க்டெல் திட்டமிட்டுள்ளது.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK