இந்தியாவில் விரைவில் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள்..? ரிசர்வ் வங்கி புதிய திட்டம்..!

இந்தியாவில் விரைவில் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள்..? ரிசர்வ் வங்கி புதிய திட்டம்..!

கிழிந்த ரூபாய் நோட்டுகளுக்கு ஆகும் செலவைக் குறைக்க பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் விட ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளது.

ரிசர்வ் வங்கி ரூபாய் நோட்டுகளையும், நாணயங்களையும் அச்சடித்து புழக்கத்தில் விட்டு வருகிறது. ரூபாய் நோட்டுகளை அச்சடிக்க ரிசர்வ் வங்கி கடந்த 2024-25 நிதி ஆண்டில் ரூ.6 ஆயிரத்து 372 கோடி செலவிட்டு உள்ளது.

இது 2023-24-ம் நிதி ஆண் டில் ரூ.5 ஆயிரத்து 101 கோடி யாக இருந்தது. ரூபாய் நோட்டுகள் கிழிவதால் மீண்டும் அச்சடிக்க ரிசர்வ் வங்கிக்கு அதிக செலவாகிறது.

அதாவது கடந்த 2024-25 நிதி ஆண்டில் மட்டும் 2,357கோடி எண்ணிக்கையிலான ரூபாய் நோட்டுகள் (ரூ.500, ரூ.200, ரூ.100, ரூ.50, ரூ.20, ரூ.10 நோட்டுகள் அடங்கும்) கிழிந்ததால் திரும்ப பெறப்பட்டுள்ளன.

இது கடந்த 2023-24-ம் நிதி ஆண்டில் 2 ஆயிரத்து 124 கோடியாக இருந்தது. திரும்ப பெறப்பட்ட கிழிந்த நோட்டுகளில் ரூ.500 அதிகமாக உள்ளது. இதற்கு அடுத்தப்படி யாக ரூ.100 நோட்டுகள் உள்ளது

பிளாஸ்டிக் ரூபாய் நோட்டு:
கிழிந்த ரூபாய் நோட்டுகளை திரும்ப பெற்று, மீண்டும் அச்சிடுவதற்காக ஆகும் செலவை குறைக்க பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகளை இந்தியாவில் அறிமுகப்படுத்த ரிசர்வ் வங்கி திட்டமிட்டு உள்ளது.

காகித ரூபாய் நோட்டுகளை விடவும் பிளாஸ்டிக் ரூபாய்நோட்டுகளுக்கு ஆயுள் முடிவு எடுக்கப்பட்டு உள்ளதாகவும், விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் என்றும் ரிசர்வ் வங்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகளை வழங்குவதற்கு ஏதுவாக ஏ.டி.எம். எந்திரங்களிலும் மாற்றங்கள் கொண்டு வரப்பட உள்ளன. பிளாஸ்டிக் உலக அளவில் முதலாவது நாடாக ஆஸ்திரேலியா கடந்த 1988-ம் ஆண்டு ரூபாய் நோட்டுகளை அறிமுகப்படுத்தியது.

தற்போது சிங்கப்பூர், இந்தோனேசியா, தாய்லாந்து, மலேசியா, கனடா உள்ளிட்ட 60-க்கும் மேற்பட்ட நாடுகள் தங்கள் நாட்டு மதிப்பிலான பிளாஸ்டிக் நோட்டுகளை பயன்படுத்தி வருகின்றன என்பது குறிப் பிடத்தக்கது.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK