ஆரோக்கிய உணவு என்ற பெயரில் மறைந்திருக்கும் ஆபத்துகள் பற்றி உங்களுக்கு தெரியுமா...??
ஆரோக்கியமானவையாக நினைத்து பலரும் உட்கொள்ளும் உணவு பதார்த்தங்கள் உடல் நலத்திற்கு பங்கம் விளைவிப்பவையாக இருக்கின்றன. அவற்றுள் முக்கியமான சிலவற்றை பார்ப்போம்.
👉இனிப்பு யோகர்ட்(Sweet Yogurt): யோகர்ட் உடல் ஆரோக்கியத்துக்கு நல்லது. அதில் புரோபயாடிக்குகள் மற்றும் கால்சியம் நிறைந்திருக்கின்றன. ஆனால் இனிப்பு சேர்க்கப்பட்ட, வண்ண நிறங்களை கொண்ட யோகர்ட்டுகளை தவிர்ப்பதே நல்லது.
ஏனெனில் அதில் சர்க்கரைகளும், செயற்கை சுவையூட்டிகளும் அதிகமாக கலந்திருக்கும். அவை இரத்தத்தில் சர்க்கரை அளவை திடீரென அதிகரிக்க செய்துவிடக்கூடும். அதற்கு பதிலாக சாதாரண தயிரை தேர்ந்தெடுப்பதே நல்லது.
👉வெஜ் சிப்ஸ் (Chips): உருளைக்கிழங்கு, மரவள்ளிக்கிழங்கு ஆரோக்கியமானதுதான். அவற்றில் தயாரிக்கப்படும் சிப்ஸ்களில் உப்பு அதிகம் சேர்க்கப்பட்டிருக்கும். எண்ணெய்யிலும் பொரித்தெடுக்கப்படும் என்பதை விட அதில் நார்ச்சத்து குறைவாகவே இருக்கும்.
அதற்கு பதிலாக வேகவைத்த காய்கறி துண்டுகளை சிப்ஸ்களாக ருசிப்பது ஆரோக்கியத்துக்கு நலம் சேர்க்கும்.
👉டயட் சோடா(Diet Soda): குறைந்த கலோரி கொண்ட பானம் என்று குறிப்பிடப்பட்டிருந்தாலும் டயட் சோடாவில் செயற்கை இனிப்பூட்டிகள் உள்ளன. இவை குடல் ஆரோக்கியத்தை பாதிக்கக்கூடும். மேலும் சர்க்கரை மீதான ஆசையை அதிகரிக்க செய்துவிடும். இதை தொடர்ந்து ருசிப்பது வளர்சிதை மாற்ற பிரச்சனைகள் மற்றும் உடல் எடை அதிகரிப்புக்கு வித்திடும்.
இனிப்பு சேர்க்கப்படாத மூலிகை தேனீர் அல்லது இயற்கையாகவே கார்பனேற்றம் செய்யப்பட்ட பானங்களை தேர்ந்தெடுப்பது நல்லது