சிங்கப்பூரில் புரதச்சத்தை நாடும் பிரியர்கள்..!! காரணம் என்ன..??
சிங்கப்பூரில் உள்ள எந்த ஒரு கடைத் தொகுதிக்குள் நுழைந்தாலும் புரோட்டின் அல்லது புரதச்சத்தை என்ற வார்த்தையை தவிர்ப்பது கடினமாகிவிட்டது. இதற்கு காரணம் 2000 ஆம் ஆண்டுகளில் முற்பகுதியில் குறைந்த கொழுப்பு உணவுகளுக்கு இறந்த மோகம் இப்போது அதிக புரதச்சத்து உள்ள உணவுகளுக்கு வந்துள்ளது.
கோழி, சால்மன் மீன், முட்டை போன்ற இயற்கையான புரத உணவுகளை தாண்டி சீரியல்(cereal), தயிர், சிப்ஸ், தண்ணீர் பாட்டில்களில் கூட அதிக புரதச்சத்து என்றால் முத்திரை பெரிய எழுத்துக்களில் அச்சிடப்பட்டு வருகிறது.
புரதச்சத்து அதிகமாக உள்ள உணவுகளுக்கான மோகத்தால் சந்தையில் பல புதிய தயாரிப்புகள் அறிமுகமாகி வருகின்றன. உதாரணமாக, 7- இலெவன் கடைகளில் ஏறத்தாழ 60 சதவீத கிளைகளில் புரதச்சத்து உணவுகளுக்கென தனிப்பகுதிகள் ஒதுக்கப்பட்டு இருக்கின்றன.
வழக்கமான உணவுகளை விட இவை விலை அதிகம் என்றாலும் மக்கள் அதனையே விரும்பி வாங்குகின்றனர் உதாரணமாக ஒரு சாதாரண சாக்லேட் பாலின் விலையை விட அதே முத்திரையில் அதிக புரதச்சத்துள்ள பாலின் விலை இரு மடங்கு அதிகமாக உள்ளது.
இந்த திடீர் மாற்றத்திற்கான காரணம் என்ன? உடற்பயிற்சி, ஆரோக்கியம் மீதான ஆர்வம் அதிகரித்ததன் காரணம் ஆகும். ஹைரோக்ஸ், குரோஸ்ஃபிட் போன்ற கடுமையான உடற்பயிற்சிகளை மேற்கொள்பவர்கள் தங்கள் தசைகளை விரைவாக மீட்டு எடுக்க புரதத்தை அதிகம் நாடுகின்றனர் மேலும் இது உலக அளவில் பிரபலமாகி வரும் வசம்பிக் போன்ற எடை குறைப்பு மருந்துகளின் தாக்கமும் இதில் அடங்கியுள்ளது.
இந்த மருந்துகள் ‘ஜிஎல்பி 1’ என்ற ஹார்மோனை தூண்டி பசியை குறைகிறது அதிக புரதச்சத்தை உட்கொள்வதால் இயற்கையாகவே உடலில் அந்த ஹார்மோன் தூண்டப்படுகிறது இதனால் பலரும் எடை குறைப்பிற்காக அதிக புரதச்சத்துள்ள உணவுகளை விரும்பி செல்கின்றனர்.
புரதம் ஒருவருக்கு எவ்வளவு தேவை? 2019 ஆம் ஆண்டு தேசிய ஊட்டச்சத்து கணக்கெடுப்பின்படி சிங்கப்பூர்களில் நால்வரில் மூன்று பேர் ஏற்கனவே தங்களுக்கு தேவையான அளவு புரதத்தை அவர்களது அன்றாட உணவிலேயே எடுத்துக் கொள்கின்றனர்.
சுகாதார மேம்பாட்டு வாரியத்தின் வழிகாட்டுதலின்படி 49 வயது மற்றும் அதற்கு உட்பட்டவர்களுக்கு அவர்களுடைய உடல் எடையில் ஒவ்வொரு கிலோவிற்கும் 0.8 கிராம் புரதம் போதுமானது.
50 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு வயது அதிகரித்ததன் காரணமாக ஏற்படும் தசை இழப்பை தடுப்பதற்கு கிலோவுக்கு 1.2 கிராம் புரதம் தேவைப்படுகிறது.
முதியவர்களில் இருவரில் ஒருவர் அந்த அளவை எட்டுவதில்லை என்பது குறிப்பிடப்பட்டுள்ளது. அதிக புரதம் உள்ளது என்பதாலேயே ஒரு பாக்கெட் உணவை ஆரோக்கியமானது என்ற அர்த்தம் இலலை என மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
விளம்பரங்களை நம்பி அதிகமாக செலவு செய்து இவற்றை வாங்குவதற்கு பதிலாக குழந்தைகளுக்கு வீட்டில் சமைக்கும் முட்டை கடலை மாமிச உணவுகளை கொடுப்பதையே பாதுகாப்பாக கருதுவர் கருதுகிறேன் என இல்லத்தரசி சுமதி ராமச்சந்திரன் கூறியுள்ளார்.