சிங்கப்பூரில் ஏற்பட்ட தீடீர் தீ விபத்து..!!
எங்கே..?? உயிர்சேதம் ஏற்பட்டதா..??
சிங்கப்பூர்: துவாஸ் பகுதியில் இருக்கும் ஒரு கிடங்கில் இன்று (ஜூன் 12) அதிகாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. பல மணி நேரம் தீ சுவாலையாக எரிந்தது.
தீ விபத்து குறித்த தகவலானது சிங்கப்பூர் குடிமை தற்காப்பு படையினருக்கு அதிகாலையில் தகவல் வந்ததை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அப்போது அந்த கிடங்கு ஒரு கால்பந்த மைதானத்தின் அளவு இருந்ததாக தெரியவந்தது.
அதிகாலை 3 மணி அளவில் 3 குல் கிரசென்ட் என்ற முகவரியில் தீ விபத்து ஏற்பட்டதாக தகவல் கிடைத்தது என்று சிங்கப்பூர் குடிநீர் தற்காப்பு படை முகநூல் பதிவு அதிகாலை 5 மணி அளவில் தகவல் வெளியிடப்பட்டது.
தீயை அணைக்க, தீயணைப்பு வீரர்கள் 7 நீர்ப் பீரங்கிகள், ஒரு ஆள் இல்லாத தீயணைப்பு இயந்திரம், ஒரு பம்பு தீயணைப்பு இயந்திரம் மற்றும் ஒரு வான்வழி கண்காணிப்பு கருவிகளை அதிகாரிகள் பயன்படுத்தியதாக தெரியவந்தது.
ஒரு கழிவு பொருட்கள் மற்றும் ரசாயனங்களால் இந்த தீ விபத்து கிடங்கில் ஏற்பட்டதாகவும் சுமார் 80 தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டதாகவும் 20 அவசரகால வாகனங்களும் பயன்படுத்தப்பட்டது என சிங்கப்பூர் குடிமை பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது.
இறுதியாக தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இந்த பதிவு வெளியிடப்படும் வரை, இந்த தீ விபத்தில் யாருக்கும் எந்தவித காயமும் ஏற்பட்டதாக தகவல் வெளியாகவில்லை.