சிங்கப்பூரின் மெக்பியர்சன் HDB வீட்டில் தீ விபத்து..!! 70 வயது முதியவர் உயிரிழப்பு..!

சிங்கப்பூரின் மெக்பியர்சன் HDB வீட்டில் தீ விபத்து..!! 70 வயது முதியவர் உயிரிழப்பு..!

சிங்கப்பூரின் மெக்பியர்சன் பகுதியில் உள்ள சர்க்யூட் ரோடு பிளாக் 39 இல் உள்ள ஒரு HDB குடியிருப்பு வீட்டில் இன்று (ஜூலை 28) அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது.

இந்த தீ விபத்தில் 9-வது மாடி வீட்டில் உள்ள வரவேற்பு அறையில் சுயநினைவின்றி 70 வயது உடைய முதியவர் ஒருவர் மீட்கப்பட்டுள்ளார்.

அவரை தீயணைப்பு வீரர்கள் மீட்டு சிகிச்சைக்காக சாங்கி பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இன்று (ஜூலை 28) அதிகாலை சுமார் 2:05 மணி அளவில் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையினருக்கு (SCDF) இந்த விபத்து குறித்த தகவல் ஆனது தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகவலறிந்து தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போது, 9-வது மாடி வீட்டின் வரவேற்பரையில் இருந்து அடர்ந்த கருப்பு புகை வெளியேறிக் கொண்டிருந்தது.

வீட்டின் கதவை வலுக்கட்டாயமாக உடைத்து உள்ளே நுழைந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்து அங்கிருந்த முதியவரை மீட்டனர்.


பின்பு அவருக்கு உடனடியாக முதலுதவி CPR அளித்து, மேல் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக அந்த குடியிருப்புப் பகுதியைச் சேர்ந்த சுமார் 80 குடியிருப்பாளர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.

இந்த தீ விபத்துக்கான முதன்மை காரணம் குறித்து சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையினரும் காவல்துறையினரும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.