சிங்கப்பூரில் 2 வாகனங்கள் நேருக்கு நேர் மோதல்..!! காருக்குள் இருந்தவர்களின் நிலை என்ன..??

சிங்கப்பூரில் 2 வாகனங்கள் நேருக்கு நேர் மோதல்..!! காருக்குள் இருந்தவர்களின் நிலை என்ன..??

சிங்கப்பூரில் உமே நகரில் 2 வாகனங்கள் சாலையில் நேருக்கு நேர் மோதி கொண்டதில் ஒரு வாகனம் தலைகீழாக கவிழ்ந்துள்ளது.

இந்த விபத்து குறித்த காணொளிகளானது சமூக ஊடகப் பக்கங்களில் பகிரப்பட்டு வருகின்றன. அந்த காணொளிகளில் ஒரு கார் தலைகீழாக கவிழ்ந்து கிடப்பதும் அதன் முன் குதி கடுமையாக சேதம் அடைந்திருப்பதும் தெரிகிறது.

நேற்று (ஜூன் 11) இரவு உமே சாலையிலிருந்து உமே 2 சாலையை நோக்கி செல்லும் வழியில் 2 வாகனங்கள் சம்பந்தப்பட்ட சாலை விபத்து நிகழ்ந்துள்ளதாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு காவல்துறையினரும், சிங்கப்பூர் குடிமைப் பாதுகாப்புப் படையினரும் விரைந்து வந்தனர்.

சம்பவ இடத்தில் காயமடைந்த 61 மற்றும் 69 வயதுடைய 2 வாகன ஓட்டுநர்களையும் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அதிகாரிகள் கொண்டு சென்றனர்.

மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் பொழுது 2 ஓட்டுநர்களும் சுயநினைவுடன் இருந்ததாக சிங்கப்பூர் குடிமைப் பாதுகாப்படையினர் தெரிவித்துள்ளனர்.

விபத்தில் சம்பந்தப்பட்ட 61 வயதுடைய ஓட்டுநர் மது போதையில் வாகனம் ஓட்டியதால் இந்த விபத்தை ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் அந்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அந்த நபரிடம் காவல்துறை விசாரணையைத் தொடர்ந்து நடத்தி வருகிறது.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK