சமூக ஊடகங்களில் பரவி வரும் காணொளி பதிவு..!! மண்டாய் வனவிலங்கு பாதையில் தவறாக பாம்புகளை கையாண்ட 6 பேர் மீது குற்றச்சாட்டு..!!

சமூக ஊடகங்களில் பரவி வரும் காணொளி பதிவு..!! மண்டாய் வனவிலங்கு பாதையில் தவறாக பாம்புகளை கையாண்ட 6 பேர் மீது குற்றச்சாட்டு..!!

சிங்கப்பூர்: மண்டாய் பாதையில் காட்டு பாம்புகளை தவறாக கையாண்ட ஒரு குழுவினரின் காணொளி பதிவுகள் மற்றும் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது.

சம்பவம் நடந்த நேரத்தில் குறைந்தது 6 பேர் இருந்தது போல் தெரிய வந்தது. அந்த காணொளி பதிவில் ஒரு நபர் சுமார் ஒரு மீட்டர் நீளமுள்ள பாம்பை ஒரு மரத்திலிருந்து நகர்த்துவதும் மற்றொரு நபர் தன் கையில் பாம்புடன் புகைப்படம் எடுப்பது போலும் தெரிகிறது.

மேலும் இந்த வீடியோ பதிவில் பிரகாசமான விளக்குகளுடன் கூடிய தொழில் முறை ஒலி அமைப்புகளும் அந்த இடத்தில் இருப்பது தெரிகிறது.

இந்த காணொளி பதிவை சமூக ஊடகங்களில் இணையவாசி ஒருவர் பதிவிட்டுள்ளார். அந்த குழுவினர் இரண்டு பாம்புகளை பிடித்திருப்பதும் அவற்றில் ஒன்று தன் தோலை உரித்து கொண்டு இரந்ததாகவும் அந்த பதிவில் குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் பாம்பை கையாள்வதை தொடர்வதற்கு முன்பாக அதன் தோரணை “இயற்கைக்கு மாறாக தெரிகிறது” எனவும் அந்த குழுவினர் விவாதித்ததையும் அந்த நபர் கேட்டதாக கூறியுள்ளார்.

மண்டாய் பாதையில் காட்டு பாம்புகளை கையாண்ட காணொளி பதிவு வெளியிட்டது குறித்து விசாரித்து வருவதாக தேசிய பூங்காக்கள் வாரியம் தெரியவந்துள்ளது. இந்த சம்பவத்தில் பொதுமக்கள் பலரும் தனிப்பட்ட முறையில் அங்கு இருந்த பூங்காக்கள் வாரிய ஊழியர் ஒருவரும் சம்பந்தப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

கடந்த மூன்று ஆண்டுகளில் பூங்காவிற்குள் விலங்குகளை முறையற்ற முறையில் கையாண்டது தொடர்பாக பத்திருக்கும் குறைவான சம்பவங்களையும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகளும் தெரிவித்துள்ளனர். விதிமுறைகளின் படி அனுமதி இல்லாமல் எந்த ஒரு பூங்காவிலும் விலங்குகளை பிடிப்பது அதை இடமாற்றுவது அல்லது அதற்கு உணவு அளிப்பது சட்டவிரோதமாகும்.

இதில் பிடிபடுபவர்கள் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டால் அவர்களுக்கு $5,000 வரை அபராதம் விதிக்கப்படும்.

வனவிலங்குகளிடமிருந்து பாதுகாப்பான தூரத்தை பின்பற்றுமாறும் உற்று நோக்குவதற்காக தொலைநோக்கிகள் போன்ற கருவிகளை பயன்படுத்த வேண்டும் என்றும் பூங்கா வாரியம் பொதுமக்களுக்கு நினைவூட்டியுள்ளது. விலங்குகளை எதிர்கொள்ளும்போது அமைதியாக இருந்து உங்களுக்கும் விலங்குகளுக்கும் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் அதை கையாள வேண்டும் என்றும் கூறியுள்ளது.

மண்டாய் பாதையில் காட்டு பாம்புகளை தவறாக கையாண்டதாக கூறப்படுகின்ற ஒரு குழுவினர் மீது தேசிய பூங்காக்கள் வாரியம் விசாரணை மேற்கொண்டு வருகிறது மேலும் இதில் சம்பந்தப்பட்ட நபர்களில் பொதுமக்கள் பலரும் தனிப்பட்ட முறையில் அங்கு இருந்த பூங்காக்கள் வாரிய ஊழியர் ஒருவரும் இருப்பதாக விசாரணையின் போது தெரியவந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK