செயற்கை நுண்ணறிவின் தாகம்… உலகை வறட்சிக்குத் தள்ளுமா..??

செயற்கை நுண்ணறிவின் தாகம்... உலகை வறட்சிக்குத் தள்ளுமா..??

தட்ப நிலை ஆண்டுகளில் செயற்கை நுண்ணறிவு கருவிகளின் வளர்ச்சி யாராலும் நிராகரிக்க முடியாத ஒன்றாக உள்ளது. நிர்வாகங்கள் முதல் பல்வேறு துறைகள் வரை பல பணிகளை எளிதாக்கும் வகையில் செயற்கை நுண்ணறிவு பயன்பட்டு வருகிறது.

இதன் மிக அதிகப்படியான நீர் மற்றும் மின்சார பயன்பாடு, உலகளவில் பெரும் கவலைகளையும் எதிர்ப்புகளையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், 2030-ம் ஆண்டிற்குள் செயற்கை நுண்ணறிவு தரவு மையங்கள் பயன்படுத்தும் நீரின் அளவு 1.3 பில்லியன் (130 கோடி) மக்களின் தேவைகளுக்கு சமமாக இருக்கும் என்று ஐ.நா. அறிக்கை எச்சரித்துள்ளது.

செயற்கை நுண்ணறிவு தரவு மையங்கள் தங்களை குளிர்வித்துக் கொள்ளும் அமைப்புகளை (Cooling Systems) நம்பியிருக்கின்றன. இவை மில்லியன் கணக்கான லிட்டர் தண்ணீரை உறிஞ்சுகின்றன.

தரவு மையங்களின் மின்சார பயன்பாடும் ஒரு தனி நாடாகக் கருதினால், மின்சார நுகர்வில் அது உலகளவில் 11-வது இடத்தைப் பிடித்திருக்கும். ஒரு செயற்கை நுண்ணறிவு தரவு மையத்தின் செயல்பாடுகள் தொடங்கிய பிறகு, நிலப்பரப்பின் வெப்பநிலை சராசரியாக 2 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கிறது.


ஏ.ஐ. தரவு மையங்கள் வெளியிடும் வெப்பம், 9.9 கி.மீ (6.2 மைல்) தூரம் வரை பரவி, 340 மில்லியனுக்கும் அதிகமான மக்களை பாதிப்புக்குள்ளாக்குகிறது என அந்த ஆய்வு தெரிவிக்கிறது.

தொழில்நுட்ப வளர்ச்சி மனித வாழ்வை எளிதாக்கினாலும், அதன் சுற்றுச்சூழல் தாக்கங்களை குறைக்கும் நடவடிக்கைகள் அவசியம் என்ற கோரிக்கைகள் உலகளவில் வலுத்து வருகின்றன.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK