ஜாலான் பூன் லே பகுதியில் வெள்ள அபாய எச்சரிக்கை..!!
ஜூன் மாதம் தொடக்கத்தில் சிங்கப்பூரின் சில பகுதிகளில் சில நாட்கள் பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று வானிலை ஆய்வாளர்கள் ஏற்கனவே கூறியிருந்தனர். மேலும் சில நாட்களில் பின்னிரவு மற்றும் அதிகாலை நேரங்களில் இடியுடன் கூடிய மழையும் பலத்த காற்றும் வீசும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து இன்று(ஜூன் 11) காலை பெருமழை பெய்ததை அடுத்து, ஜூரோங் வெஸ்டில் உள்ள ஒரு சில பகுதியை தவிர்க்க வேண்டும் என வாகன ஓட்டுனர்களை பொது பயனிட்டு கழகம் தெரிவித்திருந்தது.
திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் இருப்பதனால் அடுத்த ஒரு மணி நேரத்திற்கு, ஜூரோங் வெஸ்டில் உள்ள ஜாலான் பூன் லே பகுதிக்கு வாகன ஓட்டிகள் செல்ல வேண்டாம் என காலை 9:49 மணிக்கு பொது பயனீட்டு கழகம் எக்ஸ் பதிவில் அறிவுறுத்தியுள்ளது.
ஜூன் மாதத்தின் முதல் 15 நாட்களுக்கான மொத்த மழை பொழிவு, சிங்கப்பூரின் பெரும்பாலான பகுதிகளில் சராசரிக்கும் குறைவாகவே இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.