சிங்கப்பூரில் மைக்ரோசாப்ட் பெயரில் அதிகரிக்கும் மோசடிகள்..!! பொதுமக்களுக்கு CSA எச்சரிக்கை..!!

சிங்கப்பூரில் மைக்ரோசாப்ட் பெயரில் அதிகரிக்கும் மோசடிகள்..!! பொதுமக்களுக்கு CSA எச்சரிக்கை..!!

சிங்கப்பூரில் மைக்ரோசாப்ட்(MICROSOFT ) பெயரில் அதிகரிக்கும் மோசடிகள் காரணமாக காவல் துறையும் சிங்கப்பூர் இணைய பாதுகாப்பு முகமையும்(CSA) பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

மைக்ரோசாஃப்ட் தொழில்நுட்ப ஆதரவு பணியாளர்கள் போல் ஆள்மாறாட்டம் செய்யும் மோசடிகளில் இருந்து பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இந்த ஆண்டு(2026) பிப்ரவரி மாதம் முதல் உள்ளூரில் இது போன்ற மோசடிகள் குறைந்தது 10 வழக்குகள் பதிவாகி இருக்கும் எனவும், இதில் பாதிக்கப்பட்டவர்கள் குறைந்தது S$1.7 மில்லியனை இழந்துள்ளதாகவும்  அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இது போன்ற மோசடிகளில் பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் கணினி உலாவியால் ஒரு பாப்-அப்(Pop-Up) பிரச்சனைகளைக் காண்கின்றனர். அது மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இருந்து வருவதாக தெரிவிக்கிறது.

அதிலிருந்து அவர்களது சாதனம் ஹேக் (hack) செய்யப்பட்டுள்ளது அல்லது அதன் பாதுகாப்பு மீறப்பட்டுள்ளது என்று குறிப்பிடுகிறது. அந்த எச்சரிக்கை செய்தியானது பாதிக்கப்பட்டவர்களை தொழில்நுட்ப ஆதரவு என்று அழைக்கப்படுபவர்களைத் தொடர்பு கொள்ள ஒரு VoIP எண்ணை அழைக்குமாறு அறிவுறுத்துகிறது.

பாதிக்கப்பட்டவர்கள் அந்த எண்ணை அழைத்த பிறகு பெரும்பாலும் அது ஒரு காவல்துறை அதிகாரி போல ஆள்மாறாட்டம் செய்யும் மற்றொரு மோசடிக்காரரிடம் செல்கிறது. இந்த மோசடிக்காரர்கள் பாதிக்கப்பட்டவரின் சாதனம் பண மோசடி போன்ற சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்பட்டு வருவதாக கூறி அவர்களிடம் வங்கி உள்நுழைவு தகவல்களைக் கேட்டு வாங்கி கொள்கின்றனர்.

சில சமயங்களில் மோசடிக்காரர்கள் பாதிக்கப்பட்டவர்களிடம் ரிமோட் கண்ட்ரோல் செயலிகளைப் பதிவிறக்கம் செய்யுமாறும் அறிவுறுத்தியதாக அதிகாரிகள் கூறுகின்றனர். பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் வங்கி கணக்குகளில் அங்கீகரிக்கப்படாத பரிவர்த்தனைகள் நடைபெற்ற பின்னரே தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்கிறார்கள்.

இது போன்ற  எச்சரிக்கை செய்திகளை மென்பொருள் விற்பனையாளரின் அதிகாரப்பூர்வ வழிகள் மூலம் சரிபாரமாறு அதிகாரிகள் பொதுமக்களுக்கு வலியுறுத்தியுள்ளனர். மைக்ரோசாப்ட் விலை அல்லது எச்சரிக்கை செய்திகளில் எந்த ஒரு தொலைபேசி எண்ணும் இருக்காது எனவும் அவர்கள் நினைவுப் படுத்துகின்றனர்

சந்தேகத்திற்குரிய பாப்- அப் தோன்றினால் அதில் காட்டப்படும் எண்ணை அழைக்கவோ, எந்த ஒரு இணைப்புகளையோ அல்லது பொத்தான்களையோ கிளிக் செய்ய வேண்டாம் எனவும், அதற்கு பதிலாக உடனடியாக கணினியில் உள்ள F11 அல்லது எஸ்கேப் விசையை அழுத்துமாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.

அரசு பணியாளர்கள் ஒருபோதும் பண பரிமாற்றங்கள் தொடர்பான கேள்விகளையோ, தகவல்களையோ கேட்க மாட்டார்கள் எனவும், அவர்கள் வங்கி உள்நுழைவு தகவல்களை கேட்க மாட்டார்கள் எனவும் , மேலும் தொலைபேசி அல்லது மின்னஞ்சல் வழியாக காவல்துறைக்கு அழைப்புகளை மாற்ற மாட்டார்கள் எனவும் அதிகாரிகள் வலியுறுத்துகின்றனர்.

மோசடி அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகளில் இருந்த தங்களைப் பாதுகாத்துக் கொள்ளவும், வங்கிப் பரிவர்த்தனை வரம்புகள் மற்றும் இரு காரணி அங்கீகாரம் போன்ற பாதுகாப்பு அம்சங்களை செயல்படுத்தவும் ஸ்கேம் ஷீல்டு(ScamShield) செயலியைப் பயன்படுத்துமாறு அதிகாரிகள் பொதுமக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளனர்.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK