தமிழகம் முழுவதும் சார்பதிவாளர் அலுவலகங்களில் அதிரடி சோதனை.!!
டொராண்டோ: ஏர் கனடா(Air Canada) நிறுவனத்தில் 17 ஆண்டுகள் விமானியாக 59 வயதுடைய ஜெஃப் வால் என்பவர் மூத்த விமானியாக பணிபுரிந்து வந்துள்ளார்.
அவர் தகுந்த உரிமம் இல்லாமல் 17 ஆண்டுகள் விமானியாக பணியாற்றியதும், அவ்வாறு இருந்ததில் 100-க்கும் விமானங்களை இயக்கியதற்காகவும் அவர் மீது கனடா அதிகாரிகள் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
2025 ஆம் ஆண்டு ஓய்வு பெற்ற ஜெஃப் வால் 2009 ஆம் ஆண்டு முதல் 2025 ஆம் ஆண்டு வரையிலான காலங்களில் உரிய விமானப் போக்குவரத்து துறைக்கான விமான உரிமம் இல்லாமல் இதுவரை 900 விமானங்களை இயக்கியுள்ளார் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
டொராண்டோ ஃபியர்சன் அனைத்து உலக விமான நிலையத்தில் கடந்த 2025 ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடந்த வழக்கமான சோதனையின் போது, ஜெஃப் வால் சமர்ப்பித்த ஆவணங்கள் போலியானவை என அதிகாரிகள் கண்டறிந்து விசாரணை மேற்கொண்டனர்.
அதில் அதே ஆண்டு (2025) ஜூன் மாதம் 1ஆம் தேதி என்று அவர் கைது செய்யப்பட்டுள்ளார். தற்போது அவர் மீது போலி தயாரித்தல், பொதுமக்களுக்கு இடையூறு உள்ளிட்ட வழக்குகள் உள்ளிட்ட சர் குற்றசாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளது.
ஏர் கனடா நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, தங்களின் விமானிகளுக்கு 6 மாதங்களுக்கு ஒரு முறை கடுமையான பயிற்சிகள் வழங்கப்படுவதால் பயணிகளின் பாதுகாப்புக்கு எந்த அச்சுறுத்தலும் ஏற்படவில்லை எனவும், தங்களது பிற விமானிகளிடம் நடத்தப்பட்ட தணிக்கையில் முறைகேடுகள் வேறு எதுவும் கண்டறியப்படவில்லை எனவும் இது குறித்து விளக்கம் அளித்துள்ளது.