பேருந்து வருகை நேர கணக்கீட்டு முறை மீண்டும் பழுது..!! சேவையில் பாதிப்பா..? LTA விளக்கம்..!!

பேருந்து வருகை நேர கணக்கீட்டு முறை மீண்டும் பழுது..!! சேவையில் பாதிப்பா..? LTA விளக்கம்..!!

சிங்கப்பூரில் பேருந்து வருகை நேரம் கணக்கீட்டு முறை தொழில்நுட்ப கோளாறுகள் காரணமாக பேருந்து நிலைய மின்னுணுப் பலகைகளிலும், MyTransport.sg போன்ற கைபேசி சேலைகளிலும் பேருந்து வருகை நேர தகவல்கள் துல்லியமாக காண்பிக்கப்படவில்லை.

இந்த சிக்கல் குறித்து நிலப் போக்குவரத்து ஆணையம் இன்று (ஜூன் 12) மதியம் 12:30 மணி அளவில் My transport.sg வழியாக ஒரு அறிவிப்பை வெளியிட்டு இருந்தது.

அந்த அறிவிப்பில் இந்த இடையூறு காரணமாக பேருந்து சேவைகள் எதுவும் பாதிக்கப்படவில்லை எனவும், திட்டமிட்ட நேரத்தின்படி அனைத்து பேருந்துகளும் வழக்கம்போல் இயங்கி வருவதாக குறிப்பிட்டிருந்தது.

பேருந்துகளில் உள்ள தகவல் பரிமாற்றக் கருவிகளில் ஏற்படும் தொழில்நுட்ப தடையே இதற்கு காரணம் எனவும் அறிவிப்பில் LTA தெரிவித்துள்ளது.

இதனால் ஏற்பட்ட சிரமத்திற்கு LTA வருத்தம் தெரிவித்ததோடு மட்டுமல்லாமல், பொதுமக்களின் பொறுமைக்கும் புரிதலுக்கும் நன்றி தெரிவித்தது.

பயணிகள் SimplyGo அல்லது சம்பந்தப்பட்ட பொது பேருந்து நிறுவனங்களின் அதிகாரப்பூர்வ இணையதளங்கள் மூலம் பேருந்துகளின் இயக்க நேரத்தை தெரிந்து கொள்ளலாம்.

நிலப் போக்குவரத்து ஆணையத்தின் தொழில்நுட்பக் குழுவினர் இந்த கோளாறுகளை சரி செய்யும் பயணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK