இனி E.Pass,TEP pass ல் செல்ல வேண்டாம்..!! ஏன் தெரியுமா..??
சமீபகாலமாக அதிகமாக சிங்கப்பூர் சென்றவர்கள் Epass மற்றும் TEP Pass இல் சென்றுள்ளார்கள். நீங்கள் கடந்த ஆண்டு தரவுகளை எடுத்துப் பார்த்தால் கடந்த ஆண்டில் சிங்கப்பூருக்கு அதிகமாக சென்றவர்கள் இந்த இரண்டு பாஸ் ஆகத்தான் இருக்கும்.
ஆனால் இப்பொழுது இந்த நிலைமை தலைகீழாக மாறி உள்ளது. இதில் முதலில் E.Pass ல் உள்ள பிரச்சனைகளைப் பற்றி பார்க்கலாம்.
தற்பொழுது இந்த பாஸ் இல் செல்லும் பொழுது இந்த பாசில் செல்பவர்கள் பல பிரச்சனைகளை சந்திக்கின்றனர். முதலில் இதற்கு அப்ளை செய்வதற்கு முன் ஏஜெண்டுகள் அதிகமான தொகையை முன்பணமாக கேட்கின்றனர்.
தற்போதைய சூழ்நிலையில் இந்த பாஸ் அப்ரூவல் கிடைப்பதே மிகவும் கடினமாக உள்ளது. அதிகமான பேருக்கு அப்ரூவல் கிடைப்பதில்லை. அப்படி கிடைக்காமல் போனால் ஏஜெண்டுகள் வாங்கிய முன்பணத்தை தருவதில் தாமதப்படுத்துகின்றனர் அல்லது கொடுக்காமலே விட்டுவிடுகின்றனர்.
எனவே நீங்கள் முன்பணம் செலுத்துவதற்கு முன் எவ்வளவு பணம் திருப்பி தருவீர்கள் என்று கேட்டு அதற்கு பின் முன்பணம் செலுத்துங்கள். அதிகமான தொகையை முன் பணமாக செலுத்தாமல் இருப்பது சிறப்பு.
அடுத்ததாக தற்பொழுது சிங்கப்பூர் விமான நிலையத்திலேயே இந்த Pass இல் செல்பவர்களை திருப்பி அனுப்புகின்றனர். அனைத்து டாக்குமெண்ட்களும் சரியாக இருக்கும் பட்சத்திலும் இது நடக்கிறது. இதற்கு முக்கிய காரணமாக சொல்லப்படுவது இந்த விசாவில் கம்பெனி கொடுக்கும் சம்பளம்.
அதிகமான தொகையை கம்பெனி விசாவில் போடுவதால் சிங்கப்பூர் விமான நிலையத்தில் திருப்பி அனுப்பப்படுவதாக தெரிகிறது. ஆனால் இது மட்டும் காரணம் கிடையாது.
இப்படியே திருப்பி அனுப்பப்படுபவர்களிடம் ஏஜெண்டுகள் வாங்கும் பல லட்சம் பணம் ஒரு சிலருக்கு மட்டுமே திரும்ப கிடைக்கிறது. பலரால் ஏஜென்டிடம் இருந்து அந்த பணத்தை வாங்குவதில் பல சிரமங்களை எதிர்கொள்கின்றனர்.
நீங்கள் இந்த பாசில் செல்லும் பொழுது ஒருவேளை சிங்கப்பூரிலிருந்து உங்களை திருப்பி அனுப்பினால் உங்கள் ஏஜென்ட் பணத்தொகையை திருப்பி தருவாரா என்று தெளிவாக கேட்டுக்கொண்டு அதன் பின் இந்த pass இல் முயற்சி மேற்கொள்ளலாம். முடிந்தவரை அரசு அனுமதி பெற்ற ஏஜெண்டுகளை நாடுவது சிறப்பு. முடிந்தால் இந்த pass ஐ தவிர்ப்பது மேலும் சிறப்பு.
TEP Pass இல் என்ன பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர் என்று பார்க்கலாம்!
இந்த பாஸ் நீங்கள் முறையாக சிங்கப்பூரில் 3 மாதம் மட்டுமே வேலை செய்வதற்கான பாஸ். கடந்த ஆண்டு அதிகமாக சென்றவர்கள் இந்த பாசில்தான். இந்த பாஸ் இல் சென்று திரும்பி அவர்கள் திரும்ப சிங்கப்பூர் செல்வதில் மிகவும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர்.
இந்த பாசில் சென்றவர்களை சிங்கப்பூர் கம்பெனிகளும் ஏஜெண்டுகளும் வேண்டாம் என்று சொல்கிறார்கள். நீங்கள் இந்த பார்சல் சென்று திரும்பி இருந்தால் திரும்ப சிங்கப்பூர் செல்வது கடினம் என்ற ஒரு சூழ்நிலை நிலவுகிறது.
அதேபோல் இந்த பாசிற்கும் தற்பொழுது அப்ரூவல் கிடைப்பது மிகவும் கடினமாக உள்ளது. மனிதவள அமைச்சிலிருந்த (MOM) அதிகப்படியான ரிஜக்சன்(Rejection) மட்டுமே வருகிறது.
உங்களுக்கு முறையான அனுமதி கிடைத்து நீங்கள் சிங்கப்பூர் சென்றாலும் விமான நிலையத்தில் உங்களை திருப்பி அனுப்புவதற்கான அதிகமான வாய்ப்புகள் உள்ளது.
எனவே இந்த பாசிலும் நீங்கள் சென்றீர்கள் என்றால் உங்களை திருப்பி அனுப்பினால் நீங்கள் ஏஜென்டிடம் கட்டிய பணம் உங்களுக்கு திரும்ப கிடைக்காமல் போவதற்கான வாய்ப்புகள் உள்ளது.