சிங்கப்பூரில் அதிகரிக்கும் மாரடைப்பு சம்பவங்கள்..!! பொதுமக்களுக்கு SHF அவசர விழிப்புணர்வு..!!
சிங்கப்பூரில் மருத்துவமனைக்கு வெளியே ஏற்படும் திடீர் இதய முடக்கம் (Cardiac Arrest) மற்றும் மாரடைப்பு சம்பவங்கள் உலகளவிலும் சிங்கப்பூரிலும் தற்பொழுது கணிசமாக அதிகரித்து வருகின்றன.
இதனை எதிர்கொள்வதற்காக சிங்கப்பூர் இதய (Singapore Heart Foundation – SHF) அறக்கட்டளை போன்ற அமைப்புகள் இளைஞர்களிடையே முதலுதவி விழிப்புணர்வை தீவிரப்படுத்தி வருகின்றன.
சிங்கப்பூரில் ஆண்டுதோறும் 3,000 க்கும் அதிகமானோருக்கு மருத்துவமனைக்கு வெளியே திடீர் இதய முடக்கம் ஏற்படுகிறது. மாறிவரும் இந்த நவீன வாழ்க்கை முறை, மன அழுத்தம், போதிய தூக்கமின்மை மற்றும் தவறான உணவு பழக்கவழக்கங்களால் இளம் வயதினரிடம் கூட இந்த மாரடைப்பு சம்பவங்கள் தற்போது அதிகரித்து வருகின்றன.
மருத்துவமனைக்கு வெளியே இதய முடக்கம் ஏற்படும்போது உயிர் பிழைப்பதற்கான வாய்ப்பானது 4% க்கும் குறைவாகவே உள்ளது. ஆனால் அருகில் இருப்பவர் உடனடியாக முதலுதவி அளித்தால் அந்த வாய்ப்பு 2 மடங்காக அதிகரிக்கும்.
இளைஞர்களை நாட்டின் புதிய பாதுகாப்பு அரணாக மாற்றும் நோக்கில், SHF அமைப்பு “Youth Got Power” போன்ற சிறப்பு நிகழ்ச்சிகள் மூலம் CPR மற்றும் AED பயிற்சிகளை வழங்கி ஊக்குவிக்கிறது.
சிறு வயது முதலே அவசர நிலைகளை கையாள வகையில் முன் ஆரம்ப பள்ளி மாணவர்களுக்காக ‘Be A Heart Hero’ என்னும் திட்டத்தையும் நடத்தி வருகிறது.
👉இதயம் செயலிழந்த நபரின் நெஞ்சுப் பகுதியின் மையத்தில் கைகளை வைத்து வேகமாக அழுத்தங்களை கொடுக்க தொடங்க வேண்டும்.
👉அருகில் பொது பயன்பாட்டிற்கான தானியங்கி இதயத் துடிப்பு மீட்டெடுப்பான்(Automated External Defibrillator ) கருவி இருந்தால், அதன் குரல் வழிகாட்டுதலைப் பின்பற்றி மின் அதிர்வு தந்து இதய துடிப்பை மீட்டெடுக்க உதவலாம்.
இந்த பயிற்சியை பெறுவது என்பது ஆபத்து காலத்தில் ஒரு விலைமதிப்பற்ற உயிரைக் காப்பாற்ற பெரிதும் உதவும் என்று அறக்கட்டளை தெரிவித்துள்ளது.