அவர் நீதிமன்றத்தில் குழந்தை அழுததால் கோபமடைந்த அவர், கைப்பேசி ஒளியைக் காட்டி, தலையணையால் குழந்தையைத் தாக்கி உள்ளார் என்று அவர் நீதிமன்றத்தில் குற்றத்தை ஒப்புக்கொண்டார்.
13 மாதக் குழந்தையை அடித்ததோடு, தொட்டியில் இருந்த படுக்கையில் விழும்படி தூக்கி வீசி உள்ளார்.
இந்தக் தடியடி மற்றும் கொடூரச் செயல்கள் அனைத்தும் வீட்டில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்புக் கேமராவில் பதிவாகியுள்ளது.
குழந்தையைக் கொடுமைப்படுத்துவதை நிறுத்தும்படி முன்னாள் மனைவி பலமுறை கேட்டுக்கொண்டும், அவர் அதைக் கேட்க மறுத்துக் தொடர்ந்து துன்புறுத்தி உள்ளார்.
குழந்தையைத் துன்புறுத்திய வழக்கில்,2 வயது மூத்த மகளைப் பட்டினி போட்டுத் துன்புறுத்தியது உள்ளிட்ட 9 குற்றச்சாட்டுகள் அந்த நபர் மீது சுமத்தப்பட்டு, 9 மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
தீவிர மனச்சோர்வு மற்றும் வேலைப்பளு காரணமாகவே இச்செயலில் ஈடுபட்டதாகக் கூறப்பட்ட நிலையில்,தற்போது இரண்டு குழந்தைகளும் தாயின் பாதுகாப்பில் உள்ளனர்.
பச்சிளம் குழந்தைகள் தங்களைச் சுற்றியுள்ள பெரியவர்களையே முழுமையாக நம்பியிருக்கும் நிலையில், அவர்களைப் பாதுகாக்க வேண்டிய ஒருவரே துன்புறுத்தியிருப்பது மிகுந்த வேதனைக்குரிய சம்பவமாகும். குழந்தைகளின் பாதுகாப்பில் எந்தவொரு வன்முறைக்கும் இடமளிக்கக் கூடாது என்பதையே இந்தச் சம்பவம் மீண்டும் வலியுறுத்துகிறது.