சிங்கப்பூர் உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில் பரபரப்பு..!! வெடிகுண்டு இருப்பதாக பொய் கூறிய 17 வயது இளைஞர் கைது!

சிங்கப்பூர் உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில் பரபரப்பு..!! வெடிகுண்டு இருப்பதாக பொய் கூறிய 17 வயது இளைஞர் கைது!

சிங்கப்பூரின் உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில் தனது தோழர்களிடம் வெடிகுண்டு மற்றும் மின்னணு சிகரெட் (Vape)இருப்பதாகப் பொய் கூறிய 17 வயது சிங்கப்பூர் இளைஞர் பொது மக்களுக்கு இடையூறு விளைவித்த குற்றத்திற்காகக் கைது செய்யப்பட்டுள்ளார்.

குடிநுழைவு,சோதனைச் சாவடிகள் ஆணையம் (ICA) வெளியிட்ட அதிகாரப்பூர்வத் தகவல்களின்படி, இந்தச் சம்பவம் (ஆகஸ்ட் 14) அன்று இரவு சுமார் 10:45 மணியளவில் நிகழ்ந்துள்ளது.

உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியின் வருகை பேருந்து மண்டபத்தில் (Arrival Bus Hall) இந்த சம்பவம் அரங்கேறியது.

17 வயது இளைஞர் தனது குடியுரிமைச் சோதனைகளை முடித்துவுடன், தன்னுடன் வந்த இரு தோழர்களைக் சுட்டிக்காட்டி அவர்களிடம் வெடிகுண்டும், மின்னணு சிகரெட்டும் இருப்பதாகக் கூறியுள்ளார்.

அருகில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த (ICA)அதிகாரி ஒருவர், அந்த இளைஞர் பேசியதை தற்செயலாகக் கேட்டுள்ளார். உடனடியாக சுதாரித்துக் கொண்ட அதிகாரி, அவர்கள் மூன்று பேரையும் தடுத்து நிறுத்தி தீவிர சோதனைக்கு உட்படுத்தினார்.

அதிகாரிகளின் விரிவான சோதனைக்குப் பிறகு, அந்தத் தோழர்களிடம் வெடிகுண்டோ அல்லது மின்னணு சிகரெட்டோ இல்லை என்பதும், அது முற்றிலும் பொய் என்பதும் உறுதி செய்யப்பட்டது.

பாதுகாப்பு அச்சுறுத்தல் குறித்து வதந்தி பரப்பியதற்காக அந்த 17 வயது இளைஞரை(ICA)அதிகாரிகள் காவல்துறையினடரியம்ஒப்படைத்தனர்.


பொதுமக்களுக்குத் தேவையற்ற அச்சத்தையும் இடையூறையும் ஏற்படுத்திய குற்றத்திற்காக அவர் கைது செய்யப்பட்டு, விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்

சோதனைச் சாவடிகளில் பாதுகாப்பு என்பது மிக முக்கியமான ஒன்று எனத் தெரிவித்துள்ள ICA, இது போன்ற பொறுப்பற்ற மற்றும் தவறான தகவல்களைப் பரப்புபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கத் தயங்க மாட்டோம் என எச்சரித்துள்ளனர். மேலும் பயணிகள் அனைவரும் சோதனைக் சாவடிகளில் ஒழுக்கத்தைக் கடைப்பிடிக்குமாறும் காவல் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

சிறியதாகத் தோன்றும் ஒரு பொய்யான தகவல்கூட சோதனைச் சாவடி போன்ற முக்கியமான இடங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தக்கூடும். பாதுகாப்பு தொடர்பான விஷயங்களில் பொறுப்பின்றி நடந்து கொள்வது கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதற்கு இந்தச் சம்பவம் ஒரு முக்கிய எச்சரிக்கையாக அமைந்துள்ளது.