சிங்கப்பூர் BKE-யில் திடீர் விபத்து.. எதிர்திசையில் பாய்ந்த பேருந்து..! பல வாகனங்கள் சேதம்..!!

சிங்கப்பூர் BKE-யில் திடீர் விபத்து.. எதிர்திசையில் பாய்ந்த பேருந்து..! பல வாகனங்கள் சேதம்..!!

சிங்கப்பூரின் புக்கிட் திமா விரைவுச் சாலையில் இன்று ( ஆகஸ்ட் 19) காலை இருபுறமும் கடுமையான போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்திய ஒரு பெரிய சாலை விபத்து நிகழ்ந்துள்ளது.

SBS டிரான்சிட் நிறுவனத்திற்கு சொந்தமான சேவை 170-ஐ கொண்ட ஒரு வெற்றுப் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து இந்த விபத்தை ஏற்படுத்தி உள்ளது.

கட்டுப்பாட்டை இழந்த அந்த பேருந்து விரைவுச்சாலையின் நடுவே இருந்த தடுப்பு சுவர்கள் மற்றும் செடி கொடிகளில் மோதி சேதத்தை ஏற்படுத்திக் கொண்டு, எதிர் திசை பாதைக்கு சென்றுள்ளது.

எதிர்திசை பாதைக்கு சென்றதில் மோட்டார் சைக்கிள் மற்றும் சில வாகனங்கள் மீது மோதி விபத்துக்குள்ளாகியது.சமூக வலைத்தளங்களில் விபத்து குறித்த காணொளிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அதில் பேருந்து விரைவுச்சாலையின் தடுப்புகளில் பலமாக மோதி நிற்பது, மோட்டார் சைக்கிள் சாலையில் சரிந்து கிடப்பதும் பதிவாகியுள்ளது. இந்த விபத்தில் பேருந்து ஓட்டுனர் மற்றும் 2 வாகன ஓட்டிகள் காயம் அடைந்த நிலையில் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

விபத்தை தொடர்ந்து விரைவுச் சாலையின் எதிர் திசையிலும் அவசரக்கால மீட்பு அமைப்பு வாகனங்களும் ஆம்புலன்ஸ்களும் குவிக்கப்பட்டன

விபத்து குறித்து SBS டிரான்சிட் நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் கூறியதாவது, இந்த விபத்தினால் பாதிக்கப்பட்ட அனைத்து வாகன ஓட்டிகளுக்கும் ஏற்பட்ட அசௌகரிங்களுக்கும் தங்களது ஆழ்ந்த வருத்தத்தையும் மன்னிப்பையும் தெரிவித்துக் கொள்வதாக கூறியுள்ளார்.

தற்போது இந்த விபத்து குறித்து சிங்கப்பூர் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த விபத்தால் BKE பகுதியில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டதுடன், வாகன ஓட்டிகள் மற்றும் பயணிகளிடையே பெரும் பதற்றமும் ஏற்பட்டது. திடீரென நிகழும் இதுபோன்ற விபத்துகள், சாலையில் எப்போதும் கூடுதல் கவனத்துடனும் பொறுப்புடனும் பயணிக்க வேண்டியதன் அவசியத்தை மீண்டும் உணர்த்துகின்றன. விபத்தில் பாதிக்கப்பட்ட அனைவரும் விரைவில் மீண்டு வர வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.