உத்திரபிரதேசத்தில் LPG டேங்கர் லாரி பயங்கர வெடிப்பு..!! வெளியான நடுங்கவைக்கும் CCTV காட்சிகள்..!!

உத்திரபிரதேசத்தில் LPG டேங்கர் லாரி பயங்கர வெடிப்பு..!! வெளியான நடுங்கவைக்கும் CCTV காட்சிகள்..!!

உத்திரபிரதேச மாநிலம் கெளசாம்பி மாவட்டத்தில் உள்ள சுங்கச்சாவடியில் LPG டேங்கர் லாரி வெடித்த விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.

ஜூன் 26 ஆம் தேதி அன்று அதிகாலை நடந்த இந்த பயங்கர விபத்தின் நடுங்கவைக்கும் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பொது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

உத்திரபிரதேசத்தின் கௌசாம்பி மாவட்டத்தில் கோக்ராஜ் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சிஹோரி சுங்கச்சாவடியில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

கான்பூரிலிருந்து பிரதாப்கர் நோக்கிச் சென்று கொண்டிருந்த அந்த டேங்கர் லாரி திடீரென தனது கட்டுப்பாட்டை இழந்து, சுங்கச்சாவடையின் தடுப்பு சுவரில் மோதியது. இதனால் ஏற்பட்ட வாயு கசிவு சில நொடிகளிலேயே பலத்த சத்தத்துடன் வெடித்து சிதறியது.

விபத்து நடந்த இடத்திலேயே லாரி ஓட்டுநர் தர்மேந்திர துபே மற்றும் சுங்கச்சாவடி ஊழியர் அலோக சிங் உடல் கருகி உயிரிழந்தனர்.

படுகாயம் அடைந்து தீவிர சிகிச்சை பெற்று வந்த சுங்கச்சாவடி ஊழியர்களான அனில்குமார், ஹீராமணி சிங் மற்றும் கிருஷ்ண பால் மௌரியா ஆகிய மூவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.


லாரி வெடித்ததில் ஏற்பட்ட ராட்சத தீப்பிழம்புகள் சுமார் 2 கிலோமீட்டர் தொலைவிற்கு தெரிந்தது. இந்த தீ விபத்தில் சுங்கச்சாவடி வளாகம் முற்றிலும் சேதமடைந்து, அங்கிருந்த16 மோட்டார் சைக்கிள்களும் 2 கார்களும் எரிந்து சாம்பலாகின.

காயமடைந்த மற்ற ஊழியர்களுக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், விபத்து குறித்து காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாக தெரிவித்துள்ளனர்.