கிளமெண்டியில் நடந்த கார் விபத்தில் ஐவர் மருத்துவமனையில் அனுமதி..!!!
சிங்கப்பூர்:கிளமெண்டி பகுதியில் நேற்று நடந்த விபத்தில் மூன்று கார்கள் ஒன்றோடு ஒன்று மோதியதில் ஐந்து பேர் காயமடைந்தனர்.
அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
காயமடைந்தவர்களில் இருவர் ஓட்டுநர்கள் மற்றும் மூன்று பேர் பயணிகள் என்று கூறப்படுகிறது.
காமன்வெல்த் அவென்யூ வெஸ்டில் இருந்து நேற்று காலை சுமார் 6.30 மணியளவில் விபத்து குறித்த தகவல் கிடைத்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்துள்ளது.
இந்த விபத்து தொடர்பாக வெளியான காணொளிகளில் இரண்டு கார்களின் முன்பக்கங்கள் சேதமடைந்துள்ளதை காட்டுகிறது.