10,000 க்கும் மேற்பட்ட ஊழியர்களை பணி நீக்கம் செய்யும் நிசான் நிறுவனம்..!!!
ஜப்பானிய கார் தயாரிப்பு நிறுவனமான நிசான் மோட்டார் உலகளவில் மேலும் 10,000 வேலைகளை குறைக்க உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.
நிசான் மோட்டார் நிறுவனத்தின் மொத்த பணிநீக்கங்களின் எண்ணிக்கையானது தோராயமாக 20,000 ஆக உள்ளது.இது நிசானின் உலகளாவிய பணியாளர்களில் சுமார் 15% ஐக் குறிக்கிறது.
ஜப்பானின் மூன்றாவது பெரிய வாகன உற்பத்தியாளர் அமெரிக்கா மற்றும் சீனா போன்ற முக்கிய சந்தைகளில் ஆழ்ந்த நிதி சிக்கல்களையும் பலவீனமான விற்பனையையும் தொடர்ந்து எதிர்கொள்வதால் இந்த முடிவு வந்துள்ளது.