உடல் அமைப்பிற்கு ஏற்ற ஆடையை தேர்ந்தெடுப்பது எப்படி...??? இதோ உங்களுக்கான டிப்ஸ்..!!

ஆள் பாதி.. ஆடை பாதி.. எனப் பெரியோர்கள் சும்மாவா சொன்னார்கள்… ஒருவரின் உடலுக்கு அழகை தருவது அவர் தேர்ந்தெடுக்கும் ஆடைகளை பொறுத்தது. சிலர் சுமாரான முக அமைப்பு கொண்டிருந்தாலும் அவர் அணியக்கூடிய ஆடை அவர்களை தனித்துவமாக எடுத்துக்காட்டும்.
இன்றைய காலகட்டத்தில் பெண்கள் மத்தியில் மிகவும் விருப்பப்படும் ஆடைகளில் சேலைக்கு நிகராக சுடிதாரும் உள்ளது. பல பெண்கள் சேலையை விட இது பாதுகாப்பானதாகவும் வசதியாகவும் இருப்பதாகக் கருதுகின்றனர்.
சில மாடல்கள் அணிந்திருப்பதைப் பார்த்து, விலையுயர்ந்த, தைக்கப்பட்ட துணியை வாங்கினால், அது தங்களுக்குப் பொருந்தாது என்று நினைக்கும் பல பெண்கள் இருக்கிறார்கள்.எந்த வகையான சுடிதார்கள் யாருக்கு பொருந்தும் என்பதற்கான சில பயனுள்ள குறிப்புகள் இங்கே.
காட்டன், பட்டு, சார்ஜட் டிஷ்யூ மற்றும் சில்க் காட்டன் துணிகள் உடலை இறுக்கமாகக் காண்பிப்பது மட்டுமல்லாமல், இந்த வகையான துணிகள் நம் பெண்களின் உடலுக்கும் சிறந்தவை.
ஃபிட்டிங் என்றால் ‘இறுக்கமாகப் பொருத்துவது’ என்று பலர் தவறாக நினைக்கிறார்கள். சுடிதாரை பொறுத்தவரை இது உண்மையல்ல. ஃபிட்டிங் என்றால் அது ஒருவரின் உடலுக்கு சரியாகப் பொருந்துவதை குறிக்கும்.
மெட்டீரியல்
குண்டான உடலமைப்பு கொண்ட பெண்கள் ஷிபான், க்ரீப் மற்றும் சார்ஜெட் மெட்டீரியலில் சுடிதார் தைத்தால் அழகாக இருப்பார்கள். மற்ற துணிகள் அவர்களை இன்னும் குண்டாகக் காட்டும்.
நிறங்கள்
பச்சை, நீலம் மற்றும் பழுப்பு போன்ற அடர் நிறங்கள் ஒருவரை மெலிதாகக் காட்டும்.
எளிமையான வடிவமைப்புகள்.
பெரிய எம்பிராய்டரி வேலைப்பாடுகளுடன் கூடிய ஏராளமான மலர் வடிவமைப்புகள் கொண்டாடை அணிபவரை இன்னும் குண்டாகக் காட்டும். எளிமையான வடிவமைப்புகள் கொண்ட ஆடை சிறந்ததாக இருக்கும்.
கழுத்து வடிவமைப்புகள்
கழுத்து வடிவமைப்புகளைப் பொறுத்தவரை, ரொம்ப ‘லோ’ ‘நெக்கு வேண்டாம். முதுகுப் பகுதியில் அதிக இறக்கத்துடன் தைக்க வேண்டாம். கழுத்தை ஒட்டும் அளவிற்கு மூடிய டாப்ஸ் தைப்பதால் அது அவர்களை ஒல்லியாக காட்டும். நீங்கள் சற்று நீளமான ஸ்லீவ்கள் கொண்ட டாப்ஸை அணியலாம்.
ஃப்ரில்ட் ஸ்லீவ்களை அணிய வேண்டாம்.
கணுக்கால் வரை நீளும் டாப்ஸைத் தவிர்க்கவும். அது இப்போது ஃபேஷனில் இல்லை. டாப்ஸ் கணுக்கால்களுக்குக் கீழே போகாமல் பார்த்துக் கொள்ளுங்கள். மிகவும் இறுக்கமாக இல்லாத தளர்வான-பிட்ட்டிங் டாப்ஸ் இந்தப் பெண்களுக்கு அழகாக இருக்கும்.
இவர்களுக்கு உடலோடு கச்சிதமாக பொருந்தக்கூடிய ஆடையை அணிய வேண்டும். மிகவும் இருக்கமான ஆடைகளை தவிர்க்கலாம். இவர்கள் தளர்வான மற்றும் பட்டியாலா பேண்ட் போன்றவற்றை தவிர்க்கவும்.
மெல்லிய உடல்வாகு கொண்டவர்கள்:
மெல்லிய உடல்வாகு கொண்டவர்களுக்கு பட்டு மற்றும் காட்டன் போன்ற கனமான துணிகள் பொருத்தமானவை.
ஷிபான் மற்றும் பாலியஸ்டர் துணிகளை அணியலாம். ஜூட் வகை மெட்டீரியல்களும் அவர்களுக்கு ஏற்றவை. பெரிய மலர் வடிவமைப்புகளைக் கொண்ட சுடிதார்கள் அவர்களை குண்டாகக் காட்டும்.பிரகாசமான வண்ணங்கள் ஒல்லியானவர்களுக்கு ஏற்றவை.
முழுக்கை வைத்த அனார்கலி வகை சுடிதார்கள் இவர்களுக்கு ஏற்றது.ஃபிரில் வைத்த ஸ்லீவ் அவர்களுக்கு அழகாக இருக்கும். முழங்காலுக்கு மேல் அணியும் டாப்ஸும், பட்டியாலா பேண்ட்டும் அழகாக இருக்கும்.
V’ கழுத்து வடிவமைப்பு கொண்ட டாப்ஸ்கள் அவற்றை இன்னும் அழகாகக் காட்டும். இறுக்கமாக ஆடை அணியாமல் தங்களின் உடல் அளவை விட ஒன்று அல்லது ஒன்றரை அங்குலம் பெரிய டாப்ஸை தைக்க வேண்டும். குட்டையான பெண்கள் மென்மையான வண்ணங்களைத் தேர்வு செய்யலாம்.
சுடிதார் டாப்ஸ் முழங்கால்களுக்கு இரண்டு அங்குலம் கீழே இருந்தால், நீங்கள் உயரமாகத் தெரிவீர்கள். டாப்ஸ் மற்றும் பேன்ட்களில் நீண்ட கோடுகள் இருந்தால், அது உங்கள் உயரத்தை சற்று அதிகமாகக் காட்டும். டாப்ஸின் கீழ் பகுதி பார்டர் அகலமாக இருக்கக்கூடாது.
பெரிய மலர் அல்லது அதிகமான வடிவமைப்புகளைக் கொண்ட சுடிதார்கள் இயற்கையான உயரத்தைக் குறைத்துக் காட்டும்.கழுத்து வடிவமைப்பைப் பொறுத்தவரை, ‘V’ கழுத்து எப்போதும் உங்களுக்குப் பொருந்தும்.
தோள்பட்டை பகுதியில் அகலமாக தைக்க வேண்டாம். மேற்கண்ட அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொண்டு ஆடை அணியும் பொழுது அது உங்களை மேலும் அழகாக காட்டும்.
Follow us on : click here
Instagram : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0
Facebook : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL
Telegram : https://t.me/tamilan
