வீட்டிற்கு வெளியே நின்ற சரக்கு கப்பலை கண்டு அதிர்ச்சி அடைந்த ஆடவர்…!!

வீட்டிற்கு வெளியே நின்ற சரக்கு கப்பலை கண்டு அதிர்ச்சி அடைந்த ஆடவர்...!!

நார்வேயைச் சேர்ந்த ஜோஹன் ஹெல்பெர்க் கண்விழித்து பார்த்தபோது,தனது வீட்டிற்கு வெளியே ஒரு பெரிய சரக்குக் கப்பல் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

கப்பல் இன்னும் சில மீட்டர் தூரம் சென்றிருந்தால்,அது அவரது வீட்டின் மீது மோதியிருக்கும்.

அந்தக் கப்பல் 135 மீட்டர் நீளம் கொண்டது.

அவரது பக்கத்து வீட்டுக்காரர் கரையிலிருந்து திரு.ஹெல்பெர்க்கின் வீட்டிற்கு நேராக கப்பல் செல்வதைக் கவனித்தார்.

பீதியில், அவர் திரு. ஹெல்பெர்க் வீட்டின் கதவைத் தட்டினார்.

ஜன்னல் வழியாகப் பார்த்தபோது வீட்டிற்கு வெளியே ஒரு பெரிய கப்பல் நின்று கொண்டிருப்பதை திரு. ஹெல்பெர்க் கவனித்தார்.

“என்னால் நம்பவே முடியவில்லை,” என்று அவர் கூறினார். சைப்ரஸ் கொடியுடன் கூடிய அந்தக் கப்பல் 16 பேரை ஏற்றிச் சென்றது.

அந்தக் கப்பல் ட்ரொன்ட்ஹெய்ம் ஃப்ஜோர்டில் இருந்து ஓர்காங்கருக்குச் சென்று கொண்டிருந்தபோது வழி தவறியது.

இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

விபத்து எப்படி நடந்தது என்று தெரியவில்லை.

இச்சம்பவம் குறித்து நார்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.